பஞ்ச்ஷீர் மாகாணத்தில் உச்சகட்ட மோதல்: அனைத்து மாவட்டங்களையும் பிடித்த தலிபான்

ஆப்கானிஸ்தானில் பஞ்ச்ஷீர் மாகாண தலைநகரை தலிபான்கள் சுற்றிவளைத்துள்ள நிலையில், பேச்சுவார்த்தைக்கு தயார் என தலிபான் எதிர்ப்பு குழு தலைவர் அகமது மசூத் தெரிவித்துள்ளார்.
பஞ்ச்ஷீர் மாகாணத்தில் உச்சகட்ட மோதல்: அனைத்து மாவட்டங்களையும் பிடித்த தலிபான்
x
ஆப்கானிஸ்தானில் மொத்தம் உள்ள 34 மாகாணங்களில் 33 மாகாணங்களை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், முஜாஹிதீன் குழுவினர் கட்டுப்பாட்டில் உள்ள பஞ்ச்ஷீர் மாகாணத்தை பிடிக்க கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் நூற்றுக்கணக்கான தலிபான்கள் கொல்லப்பட்டதாக எதிர்ப்பு குழுவினர் தெரிவித்தனர். இந்நிலையில், தாக்குதலை தீவிரப்படுத்திய தலிபான்கள், பஞ்ச்ஷீர் மாகாணத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் கைப்பற்றிவிட்டதாக அறிவித்துள்ளனர். மேலும், பஞ்ச்ஷீர் மாகாண தலைநகரை கைப்பற்ற கடும் சண்டை நடைபெற்று வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தலிபான் எதிர்ப்பு குழுவின் தலைவர் அகமது மசூத் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், தலிபான்கள் சண்டை நிறுத்த‌த்தை ஒப்புக்கொண்டால் பேச்சுவார்த்தைக்கு தயார் என கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்