கினியாவில் ஆட்சியை கைப்பற்றிய ராணுவம்: அதிபரை கைது செய்த சொந்த நாட்டு ராணுவம்

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் அதிபரை அந்நாட்டு ராணுவம் அதிரடியாக கைது செய்த‌து. கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் ஆல்பா காண்டே(Alpha Conde) என்பவர் அதிபராக தொடர்கிறார்.
கினியாவில் ஆட்சியை கைப்பற்றிய ராணுவம்: அதிபரை கைது செய்த சொந்த நாட்டு ராணுவம்
x
இவர் மீது பல்வெறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், நேற்று தலைநகா் கோனாக்ரியில்(CONAKRY) உள்ள அதிபா் மாளிகைக்குள் நுழைந்த, அந்நாட்டு ராணுவக்குழு, அதிபரை அதிரடியாக கைது செய்த‌து. மேலும், கினியாவில் அதிபர் ஆட்சி கலைக்கப்பட்டதாக ராணுவம் அறிவித்துள்ளது. இந்நிலையில் அதிபர் பதவியில் இருந்து விலக்கப்பட்டதை அறிந்த அந்நாட்டு மக்கள், தெருக்களில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்