"இலங்கையில் உணவுப் பஞ்சம் ஏற்படாது" - இலங்கை அரசு திட்டவட்டம்

இலங்கையில் உணவுப் பஞ்சம் ஏற்படும் என்று வெளியான தகவலை, அந்நாட்டு அரசு முற்றிலும் நிராகரித்து உள்ளது.
இலங்கையில் உணவுப் பஞ்சம் ஏற்படாது - இலங்கை அரசு திட்டவட்டம்
x
இலங்கையில் உணவுப் பஞ்சம் ஏற்படும் என்று வெளியான தகவலை, அந்நாட்டு அரசு முற்றிலும் நிராகரித்து உள்ளது. இலங்கையில் கடும் உணவுப் பஞ்சம் ஏற்படும் என்று சமீபத்தில் சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியானது. சீனாவுடன் நிலவும் கடன் சுமையால் இலங்கை பொருளாதாரம் பாதிக்கப்படும் என்றும் தகவல் வெளியானது. இந்நிலையில், இலங்கையில் உணவுப்பஞ்சம் ஏற்படப்போவதாக கூறுவது, அடிப்படை ஆதாரமற்றது என்று அந்நாட்டு நிதித்துறை இணை அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் கூறி உள்ளார். கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் சேமிக்கப்பட்டு இருப்பதாகவும், சர்வதேச ஊடகங்களின் கருத்தை முழுவதுமாக நிராகரிப்பதாகவும் தெரிவித்தார். மேலும், பன்னாட்டு நிதியத்திடம் இலங்கை நிதி உதவி கோராது என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார்.



Next Story

மேலும் செய்திகள்