ஜோ பைடன் மீது அதிருப்தி அதிகரிப்பு - ஆப்கானிஸ்தான் தோல்விக்கு காரணம்

சரியான முன் திட்டமிடல் இல்லாமல், ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க ராணுவத்தை வெளியேறச் செய்ததற்காக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீது அமெரிக்க மக்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
ஜோ பைடன் மீது அதிருப்தி அதிகரிப்பு - ஆப்கானிஸ்தான் தோல்விக்கு காரணம்
x
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைபற்ற, ஜோ பைடனின் தவறான அணுகுமுறை தான் காரணம் என்று கருத்தப்படுவதால், அவரை
ஆதரிப்பவர்களின் விகிதம் 43 சதவீதமாக சரிந்துள்ளதாக சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு கூறுகிறது. ஆப்கானிஸ்தானை விட்டு
அமெரிக்க ராணுவம் வெளியேறியதை 61 சதவீதத்தினர் எதிர்த்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் செயல்திட்டம் தோல்வியடைந்துள்ளதாக 71 சதவீதத்தினர் கருதுகின்றனர். கருத்துக் கணிப்பில் பங்கேற்ற, ஜோ பைடன் கட்சியான, ஜனனாயகக் கட்சியை சேர்ந்தவர்களில், 66 சதவீதத்தினர் ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் ஜோ பைடன் தோல்வியடைந்ததாக கூறியுள்ளனர். ஆப்கானிஸ்தான் தோல்விக்கு முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபள்யு புஷ் தான் காரணம் என்று 36 சதவீதத்தினரும், முன்னால் அதிபர் பாரக் ஓபமா தான் காரணம் என்று 15 சதவீதத்தினரும், ஜோ பைடன் காரணம் என்று 21 சதவீதத்தினரும் கூறியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்