ஆப்கானில் கடும் விலைவாசி உயர்வு - வங்கிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்

தலிபான்கள் ஆட்சியின் கீழ் வந்திருக்கும் ஆப்கானிஸ்தானில் விலை வாசி கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், அங்கு மக்கள் எதிர்க்கொள்ளும் சூழல் என்ன என்பதை விளக்கும் ஒரு தொகுப்பை பார்க்கலாம்...
ஆப்கானில் கடும் விலைவாசி உயர்வு - வங்கிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்
x
வங்கிகளில் வரிசை, விலைவாசி உயர்வால் வெறிச்சோடிய மார்க்கெட்கள், பசியால் தவிக்கும் லட்சக்கணக்கான மக்கள், பிழைக்க வழிதேடி பாகிஸ்தான் எல்லையில் குவியும் மக்கள் என ஆப்கானிஸ்தான் துயர முகமாகவே காட்சியளிக்கிறது. போதைப்பொருள் ஏற்றுமதி, வெளிநாட்டு உதவியின்றி சொல்வதற்கு பெரியளவில் ஏற்றுமதிக்கு எந்த வழியும் இல்லாத ஆப்கானிஸ்தானின் உணவு தேவை இறக்குமதியை சார்ந்தே இருக்கிறது. அந்நாட்டின் மொத்த ஜிடிபியில் 40 சதவீதம் வெளிநாட்டு உதவியாகும். இப்போது தலிபான்கள் ஆட்சியில் அது தடைப்பட்டுள்ளதால், மக்கள் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். ஆப்கானிஸ்தான் பண மதிப்பு சரிந்துவரும் நிலையில் விலை வாசி விண்ணை நோக்கி செல்கிறது. காய்கறி விலை 50 சதவீதமும், உயர்ந்துள்ளது, பெட்ரோல் விலை 75 சதவீதமும் உயர்ந்துள்ளது.

"எங்களுடைய வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எல்லா பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது. 30 சதவீதம் வரையில் விலைவாசி உயரந்துள்ளது. எல்லா குடும்பமும் பாதிக்கப்பட்டுளது. மக்களுக்கு உணவு தேவைப்படுகிறது. விலைவாசி உயர்வு நிலையை மேலும் மோசமாக்கிறது". எந்த ஒரு தொழிலும் நடக்காததால் வேலையும் இல்லை, மக்களிடம் பணப்புழக்கம் இல்லை. கிடைக்கும் சொற்ப பணத்தை கொண்டு தங்களால்  உணவுப்பொருட்களை வாங்க முடியாத சூழல் நிலவுவதாக மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். தலிபான்களின் கட்டுப்பாடு காரணமாக தேவையை சமாளிக்க வங்கியிலிருக்கும் பணத்தைகூட எடுக்க முடியாது தவிப்பதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள். மக்கள் இன்னும் சார சாரையாக பாகிஸ்தான் எல்லையை நோக்கி செல்வது தொடர்கிறது. அங்கு காத்திருக்கும் அவர்கள் தங்கள் வாழ்வுக்கு வழிபிறந்துவிடாதா என்ற ஏக்கத்தில் இருக்கிறார்கள். இத்தகைய சூழலிலும் பெண்கள் அச்சம் காரணமாக புர்கா வாங்க முயற்சிக்கும் நிலையில், புர்காகளின் விற்பனை மட்டும் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். மக்களின் நிலை நாளுக்கு நாள் மோசமாகும் நிலையில், நாட்டில் 12 லட்சம் மக்கள் பசியால் வாடும் சூழல் ஏற்படும் என ஐ.நா. அமைப்பு எச்சரித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்