ஆப்கானில் புதிய அரசை அமைக்கிறது தலிபான் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகிறது?

ஆப்கானிஸ்தானில் புதிய அரசு அமைப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தலிபான்கள் இன்று வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்கானில் புதிய அரசை அமைக்கிறது தலிபான் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகிறது?
x
ஆப்கானிஸ்தானில் புதிய அரசு அமைப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தலிபான்கள் இன்று வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து அங்கு தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றினர். இந்நிலையில் அந்நாட்டில் புதிய அரசை ஏற்படுத்துவது குறித்து தலிபான் தலைவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த‌து. இதுகுறித்து தலிபான் தலைவர்கள் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆப்கானிஸ்தான் நாட்டின் உயர் தலைவராக, தலிபான் இயக்கத்தின் தலைவராக உள்ள ஹெபத்துல்லா அகுந்த்ஸாதா பொறுப்பேற்க உள்ளதாக கூறப்படுகிறது . மேலும் ஆப்கானின் புதிய பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்ட நிலையில், புதிய அரசு தொடர்பான அறிவிப்பை தலிபான்கள் இன்று வெளியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்