கிரீஸ் நாட்டில் போராடிய ஆப்கானியர்கள் - அமெரிக்க தூதரகம் நோக்கி அணிவகுப்பு
நூற்றுக்கணக்கான கிரீஸ் வாழ் ஆப்கானியர்கள், கிரீஸ் நாட்டில் அமெரிக்க தூதரகம் நோக்கி அணி வகுத்து சென்றனர்.
நூற்றுக்கணக்கான கிரீஸ் வாழ் ஆப்கானியர்கள், கிரீஸ் நாட்டில் அமெரிக்க தூதரகம் நோக்கி அணி வகுத்து சென்றனர். அமைதியை வலியுறுத்திய அவர்கள், ஆப்கானைக் கைவிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். ஆப்கானில் குரலற்றவர்களின் குரலாய் தாங்கள் ஒலிப்பதாகவும், போரினால் களைத்துப் போய் விட்டதாகவும் அவர்கள் கவலை தெரிவித்தனர். மேலும் போரை நிறுத்த வலியுறுத்திய அம்மக்கள், ஆப்கானியர்களைக் கொலை செய்வதை நிறுத்த வேண்டும் என்றும், தங்களுக்கு நீதி வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பினர்.
Next Story

