காபூல் விமானநிலையத்தில் அமெரிக்க படைகள் - வெளியேறும் பணி துவக்கம்

காபூல் விமான நிலையத்தில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறத் துவங்கின.
காபூல் விமானநிலையத்தில் அமெரிக்க படைகள் - வெளியேறும் பணி துவக்கம்
x
காபூல் விமான நிலையத்தில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறத் துவங்கின. இது குறித்து தகவல் தெரிவித்த பென்டகன், ஆப்கானில் இருந்து மக்களை மீட்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்ததாகக் குறிப்பிட்டது. ஆப்கானைத் தலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து, அங்கிருந்து மக்களை மீட்க ஆயிரக்கணக்கான படைகள் அமெரிக்கா சார்பாக அனுப்பி வைக்கப்பட்டது. சமீபமாக காபூல் நடந்த தீவிரவாத தாக்குதலில் 13 அமெரிக்க இராணுவ வீரர்கள் உட்பட பலர் பலியாகினர். இருப்பினும் மீட்புப் பணிகள் தொடர்ந்து வந்தன. இந்நிலையில், மற்றுமொரு தாக்குதலுக்குத் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வந்தது. இந்நிலையில், காபூல் விமான் நிலையத்தில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறும் பணிகள் துவங்கியுள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்