இறுதி கட்டத்தில் சீன விண்வெளி நிலையம்: விண்வெளியில் சீன வீரர்கள் நடை பயணம்

சர்வதேச விண்வெளி மையத்திற்கு போட்டியாக சீன விண்வெளி நிலையம் அமைக்கும் பணியில் அந்நாட்டு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இறுதிக்கட்ட பணியில் விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ள ரோபா கரம் பற்றி விவரிக்கிறது, இந்த தொகுப்பு....
இறுதி கட்டத்தில் சீன விண்வெளி நிலையம்: விண்வெளியில் சீன வீரர்கள் நடை பயணம்
x
டியாங்காங் விண்வெளி நிலையத்தின் மேற்பரப்பில் பொருத்தப்பட்டுள்ள பிரமாண்டமான ரோபோ கரத்தின் இறுதிக்கட்ட வேலைகளை வெற்றிகரமாக செய்து முடித்தனர். 

கடந்த முறை, விண்வெளி நடைபயணம் மிகக் கடினமான, சிக்கல் நிறைந்த விசியமாக இருந்தது என்றும், ஆனால் அதில் கற்ற பாடங்கள் இந்த முறை வெகுவாக பயன்படுத்தப்பட்டு, மிகுந்த தன்னம்பிக்கையுடன், அமைதியான முறையில் பணிகள் முடிக்கப்பட்டதாக, சீன விண்வெளி வீரர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இணைத் தலைமை வடிவமைப்பாளர் லியு
வெய்போ தெரிவித்துள்ளார்.

இரண்டு வெப்ப பம்ப்புகள் மற்றும் மூலப் பெட்டகத்திற்கான வெப்ப கட்டுப்பாடு கருவிகளை பொறுத்தும் பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன.

ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் கூட்டு பங்களிப்பில் இயக்கப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு போட்டியாக, சீனா இந்த விண்வெளி
நிலையத்தை உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்