கலிபோர்னியாவில் காட்டுத் தீப்பரவல் - ஹெலிகாப்டர்கள் மூலம் தீயணைப்புப் பணி

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கால்டொர் பகுதியில் காட்டுத் தீ பரவி வரும் நிலையில், அதை ஹெலிகாப்டர்களின் உதவியோடு அணைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.
கலிபோர்னியாவில் காட்டுத் தீப்பரவல் - ஹெலிகாப்டர்கள் மூலம் தீயணைப்புப் பணி
x
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கால்டொர் பகுதியில் காட்டுத் தீ பரவி வரும் நிலையில், அதை ஹெலிகாப்டர்களின் உதவியோடு அணைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. இந்தக் காட்டுத் தீயில் இதுவரை 53 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் எரிந்து சாம்பலாகி உள்ளன. சியிரா நெவெடா பகுதியில் காட்டுத் தீப்பரவலால் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.  இதில் கிட்டத்தட்ட ஆயிரத்து 200 வீடுகளும், கட்டடங்களும் சேதமடைந்துள்ளன. மேலும், 16 ஆயிரம் கட்டடங்கள் ஆபத்தான நிலையில் உள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்