கொரோனா வைரசின் தோற்றம் குறித்த ஆய்வு: "அரசியலாக்குவது மனிதாபிமானம் அற்றது" - லாவோஸ் நாட்டு பிரதமர் கருத்து
கொரோனா வைரசின் தோற்றம் குறித்து கண்டறிவதை அரசியலாக்குவது மனிதாபிமானமற்றது என்று லாவோஸ் நாட்டுப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
மேலும் வைரசின் தோற்றம் குறித்த ஆய்வு, அறிவியல் பூர்வமாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து சீன தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பிரதமர் ஃபன்கம் விஃபாவான், உலக நாடுகளின் ஒத்துழைப்பை வலியுறுத்தியதோடு, அனைத்து நாட்டு அறிவியல் விஞ்ஞானிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் உண்மையை அறியாமல் ஒருவர் மீது ஒருவர் பழி போடுவது எந்த விதத்திலும் உதவாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
Next Story

