77 கோடி கொரோனா தடுப்பூசிகள் - உலகிற்கு வழங்கியுள்ள சீனா
உலகம் முழுவதும் 77 கோடி கொரோனா தடுப்பூசிகள் சீனா சார்பாக வழங்கப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் 77 கோடி கொரோனா தடுப்பூசிகள் சீனா சார்பாக வழங்கப்பட்டுள்ளன. சீன அரசு வளர்ந்து வரும் நாடுகளுக்குத் தனது முழு ஒத்துழைப்பையும் வழங்கியிருப்பதாக அந்நாட்டு அதிபர் சி ஜின்பிங் தெரிவித்துள்ளார். இந்த வருட இறுதிக்குள் 200 கோடி தடுப்பூசிகளை வழங்க முற்பட்டுள்ளதாகவும், கோவேக்ஸ் திட்டத்திற்காக 10 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 4 வரையிலான தரவுகளின் படி, வருமான மதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் 51 சதவீதத்திற்கும் அதிகமானோர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், வருமான மதிப்பு குறைவான நாடுகளில் 1.36 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Next Story

