"அமெரிக்காவின் அரசியல் விளையாட்டால் பலிபோன உயிர்கள்" - சீனா குற்றச்சாட்டு

பெருந்தொற்று காலத்தில் அமெரிக்காவின் அரசியல் விளையாட்டால் ஏராளமான உயிர்கள் பலியாகியிருப்பதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்காவின் அரசியல் விளையாட்டால் பலிபோன உயிர்கள் - சீனா குற்றச்சாட்டு
x
பெருந்தொற்று காலத்தில் அமெரிக்காவின் அரசியல் விளையாட்டால் ஏராளமான உயிர்கள் பலியாகியிருப்பதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வளர்ந்த நாடுகளில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவின் உண்மைத் தன்மை கொரோனா பெருந்தொற்றை எதிர்கொண்டதிலேயே தெரிந்து விட்டதாக விமர்சிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறித்து ஆரம்ப கட்டத்திலேயே எச்சரித்தும், அதைக் கண்டு கொள்ளாது பொருளாதார முன்னேற்றத்தில் மட்டுமே அமெரிக்கா குறியாக இருந்ததால், 6 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் அதிகமான உயிர் பலி ஏற்பட்டுள்ளதாகவும், மூன்றரை கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்