சிலியில் வரலாறு காணாத வறட்சி - கடும் தண்ணீர் தட்டுப்பாடு
சிலியில் வரலாறு காணாத வறட்சியின் காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சிலியில் வரலாறு காணாத வறட்சியின் காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வழக்கமாக அந்நடடு தலைநகர் சான்டியாகோவில் ஜூலை மாதத்தில் மழை மற்றும் பனிப்பொழிவு இருக்கும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக புகழ்மிக்க ஆண்டிஸ் மலைத்தொடரானது பனிப்பொழிவின்றி வெறுமையாக காட்சியளிக்கிறது. மேலும், எப்போதும் 252மிமீ மழை பதிவாகும் நிலையில், இந்த ஆண்டு மழைப்பொழிவு 78 மிமீ-ஆகக் குறைந்துள்ளதாக சான்டியாகோ வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடும் வெப்ப அலை தாக்கி வரும் நிலையில், முக்கிய ஆறுகளான மப்போச்சோ மற்றும் மய்போவில் கடந்த ஆண்டை விட தண்ணீர் வற்றியுள்ளது. இதனால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தகக்து.
Next Story

