பார்த்த உடன் மறையும் புகைப்படம், வீடியோவை அறிமுகம் செய்ய உள்ள வாட்ஸ்அப் நிறுவனம்

புகைப்படங்கள், வீடியோக்கள் பார்த்த உடன் மறையும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய உள்ளது, வாட்ஸ்அப்...
பார்த்த உடன் மறையும் புகைப்படம், வீடியோவை  அறிமுகம் செய்ய உள்ள வாட்ஸ்அப் நிறுவனம்
x
புகைப்படங்கள், வீடியோக்கள் பார்த்த உடன் மறையும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய உள்ளது, வாட்ஸ்அப்... இதன் முழு விவரங்களை தற்போது பார்க்கலாம்.பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸப் செயலியை உலகெங்கும் சுமார் 250 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் 39 கோடி பேர் பயன்படுத்துகின்றனர்.ஸ்னாப்ச்சேட் என்ற செயலி மூலம் அனுப்பப்படும் புகைபடங்கள், வீடியோக்களை, அதை பெறுபவர் பார்வையிட்ட பின், சில நொடிகளில் அவரின் கைபேசியில் இருந்து தானகவே அழிந்து விடும் முறை செயல்பாட்டில் உள்ளது.வாட்ஸப் செயலியிலும், ஸ்னாப்ச்சேட்  செயலியில் நடைமுறையில் உள்ள இந்த மாயமாய் மறையும் முறையை இந்த வார இறுதியில் அறிமுகப்படுத்த உள்ளதாக வாட்ஸப் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன் மூலம் வாட்ஸப்பில் தனிப்பட்ட முறையில் ஒருவர் அனுப்பும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை, அவற்றை பெறுபவர் பார்வையிட்ட பின், சில விநாடிகளில், பெறுநரின் கைபேசியில் இருந்து மாயமாய் மறைந்துவிடும்.இந்த புதிய வசதியின் மூலம் ஸ்னாப்ச்சேட்டின் போட்டியை வாட்ஸப் நிறுவனம் சமாளிக்க திட்டமிட்டுள்ளது.இப்படி மாயமாய் மறையும் முறையின் மூலம் பயனாளிகளின் அந்தரங்க விசியங்கள், பொது வெளியில் பரவுவதை தடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.



Next Story

மேலும் செய்திகள்