சிக்கலில் நியூயார்க் மாகாண ஆளுநர் - ராஜினாமா செய்ய வலியுறுத்தும் ஜோ பைடன்

அமெரிக்காவின் நியூயார்க் மாகாண ஆளுநர் ஆன்ட்ரூ குவோமோ, பல பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது, விசாரணையில் உறுதியாகியுள்ளது.
சிக்கலில் நியூயார்க் மாகாண ஆளுநர் - ராஜினாமா செய்ய வலியுறுத்தும் ஜோ பைடன்
x
அமெரிக்காவின் நியூயார்க் மாகாண ஆளுநர் ஆன்ட்ரூ குவோமோ, பல பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது, விசாரணையில் உறுதியாகியுள்ளது. உடனடியாக பதவி விலக அதிபர் வலியுறுத்த இந்த விவகாரம் அந்நாட்டு அரசியலில் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தின் ஆளுநராக, ஜனனாயகக் கட்சியைச் சேர்ந்த ஆன்ட்ரூ குவோமோ, 2011 முதல் பதவி வகிக்கிறார்.இவர் மீது ஏராளமான பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்தக் குற்றச்சாட்டுகள் பற்றி விரிவான விசாரணை ஒன்றை நியூயார்க் மாகாணத்தின் அட்டார்னி ஜெனரல் லெடிஷியா ஜேம்ஸ் நடத்தி, இறுதி அறிக்கையை செவ்வாய் அன்று வெளியிட்டார்.ஐந்த மாதங்கள் நடந்த இந்த விசாரணையின் முடிவில், ஆன்ட்ரூ குவோமோ, 11 பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அவர் மீது பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டை சுமத்திய, ஆளுநர் அலுவலக ஊழியர் ஒருவர், சட்ட விரோதமான முறையில் பழிவாங்கப்பட்டதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து ஆன்ட்ரூ குவோமோ தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் முக்கிய ஜனனாயகக் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.ஆனால் தான் ராஜினாமா செய்யப் போவதில்லை என்றும், தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்று ஆன்ட்ரூ குவோமோ காணொளி மூலம் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து அவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற விசாரணை நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்