அமெரிக்க ராணுவ தலைமையகம் நுழைவாயிலில் நடந்த துப்பாக்கிச்சூடு - காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழப்பு

அமெரிக்கா ராணுவ தலைமையகமான பென்டகன் நுழைவு வாயில் அருகே நடந்த துப்பாக்கிச்சூடு, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க ராணுவ தலைமையகம் நுழைவாயிலில் நடந்த துப்பாக்கிச்சூடு - காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழப்பு
x
தலைநகர் வாஷிங்டனுக்கு அருகே அமைந்துள்ள ஐங்கோண வடிவ கட்டிடம், அமெரிக்காவின் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்றாகும்.2001இல் பின் லேடன் தலைமையிலான அல் கொய்தா இயகத்தினர் நடத்திய தற்கொலைப் படை தாக்குதல்களில், பென்டகன் கட்டிடத்தின் மீது ஒரு பயணிகள் விமானத்தை மோதச் செய்ததில், அங்கு பணி புரிந்த 125 அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.இந்த கட்டிடத்தின் நுழைவாயில் அருகே உள்ள மெட்ரோ பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், பென்டகன் காவலத்துறை அதிகாரி ஒரு உயிரிழந்தார்.துப்பாக்கி சூடு நடத்திய நபர் மீது காவலர்கள் திரும்பி சுட்டதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இந்தத் தாக்குதலில் கொல்லபப்ட்ட காவலர் பற்றிய விவரங்களையும், தாக்குதல் நடத்திய நபர் யார் என்பது பற்றிய விவரங்களையும் காவல் துறையினர் வெளியிடவில்லை.இந்த திடீர் தாக்குதலைத் தொடர்ந்து பென்டகன் கட்டிடம், சில மணி நேரங்களுக்கு மூடப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.அமெரிக்காவில் துப்பாக்கி சூடுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்களை உருவாக்க ஜோ பைடன் கோரியிருந்தார். ஆனால் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இத்தகைய சட்டத்தை நிறைவேற்ற போதுமான ஆதரவு இல்லாததால், துப்பாக்கிகளை கட்டுப்படுத்த முடியாத நிலை அங்கு தொடர்கிறது.




Next Story

மேலும் செய்திகள்