ஈரான் அதிபராகும் இப்ராஹிம் ரைசி..அமெரிக்கா விதித்துள்ள தடைகளை நீக்க உறுதி - அணுசக்தி உடன்படிக்கை சாத்தியமா ?

ஈரான் அதிபராக பதவியேற்க உள்ள இப்ராஹிம் ரைசி, ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள சர்வாதிகாரத்தனமான பொருளாதார தடைகளை நீக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார். இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்...
ஈரான் அதிபராகும் இப்ராஹிம் ரைசி..அமெரிக்கா விதித்துள்ள தடைகளை நீக்க உறுதி - அணுசக்தி உடன்படிக்கை சாத்தியமா ?
x
ஈரானுடன் அமெரிக்கா மற்றும் ஐந்து முக்கிய நாடுகள் ஏற்படுத்திய அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் இருந்து 2018இல், அன்றைய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமெரிக்காவை அதிரடியாக வெளியேறச் செய்தார்.

அதைத் தொடர்ந்து ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்ததால், ஈரானின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு, பொது மக்களின் வாழ்க்கைத் தரம் வெகுவாக குறைந்துள்ளது.

ஜூன் மாதம் நடைபெற்ற ஈரான் அதிபர் தேர்தலில், வெற்றி பெற்ற இப்ராஹிம் ரைசி, வியாழன் அன்று ஈரான் அதிபராக பதவியேற்கிறார். 

ஈரான் தேசியத் தொலைகாட்சியில் செவ்வாய் அன்று உரையாற்றிய இப்ராஹிம் ரைசி, ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள சர்வாதிகாரத்தனமான பொருளாதார தடைகளை நீக்க தேவையான நடவடிக்கைளை மேற்கொள்ளப் போவதாக அறிவித்தார்.

கடந்த ஜனவரியில், அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின், ஈரான் உடன் மீண்டும் அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள இரு நாடுகளிடையே பேச்சு வார்த்தை தொடங்கியது.

ஆறு கட்ட பேச்சு வார்த்தைகள் ஜூன் 20இல் முடிவடைந்த நிலையில், இரு தரப்பினரிடையே கருத்தொற்றுமை ஏற்படாததால், அடுத்த கட்டப் பேச்சு வார்த்தைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஈரான் அதிபராக பதவியேற்க உள்ள இப்ராஹிம் ரைசி, முன்பு நீதிபதியாக பணியாற்றிய போது பல்வேறு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு, ஏராளமான ஈரானியர்கள் கொல்லப்பட காரணமாக இருந்ததாக கூறும் அமெரிக்கா, அவர் மீதும் தனிப்பட்ட முறையில் பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

இந்நிலையில், தீவிர மதப்பற்றாளரான இப்ராஹிம் ரைசி, ஈரான் அதிபராக பதவியேற்றால், அவரால் அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தையும், நல்லுறவையும் ஏற்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்