சீனாவிற்கு எதிராக அணி திரளும் நாடுகள் - மலபார் பயிற்சியில் குவாட் போர் கப்பல்கள்

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியாவின் போர் கப்பல்கள் ஆகஸ்ட் இறுதியில், பசிபிக் பெரும்கடல் பகுதியில் கூட்டாக, போர் ஒத்திகையில் ஈடுபட உள்ளது பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
சீனாவிற்கு எதிராக அணி திரளும் நாடுகள் - மலபார் பயிற்சியில் குவாட் போர் கப்பல்கள்
x
1992 முதல் ஆண்டு தோறும், அமெரிக்கா மற்றும் இந்தியாவின் போர் கப்பல்கள் இணைந்து, மலபார் பயிற்சி என்று பெயரிடப்பட்டுள்ள போர் ஒத்திகைககளில் ஈடுபட்டு வருகின்றன.

2007 முதல் ஜப்பானிய போர் கப்பல்களும் இந்த போர் ஒத்திகைகளில் இந்திய, அமெரிக்க போர் கப்பல்களும் இணைந்து கொண்டன. 2020இல் ஆஸ்த்ரேலியா போர்கப்பல்களும் இணைந்து கொண்டன

 நான்கு நாட்டு போர் கப்பல்கள், போர் ஒத்திகைகள், பசிபிக் பெருங்கடல், சீன கடற்படை

ஆசிய பசிபிக் கடற் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதை தடுக்க இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்த்ரேலியா ஆகிய நாடுகள், குவாட் என்ற கூட்டமைப்பை உருவாக்கி இணைந்து செயல்பட்டு வருகின்றன.

குவாட் நாடுகளின் போர் கப்பல்கள், ஆகஸ்ட் இறுதியில், மேற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள குவாம் தீவுக்கு அருகே, மலபார் பயிற்சியில் ஈடுபட திட்டமிட்டுள்ளன.

ஆஸ்த்ரேலியாவின் குயின்ஸ்லாந்த் கடற்பகுதியில், ஞாயிறு அன்று டாலிஸ்மான் சாபர் என்று பெயரிடப்பட்ட ஏழு நாடுகளின் கூட்டு போர் ஒத்திகை முடிவடைந்தது.

ஆஸ்த்ரேலியா, அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன், கனடா, தென் கொரியா, நியுஸிலாந்த் நாடுகளைச் சேர்ந்த 18 போர் கப்பல்கள், 70 போர் விமானங்கள், 50 ஹெலிகாப்டர்கள் மற்றும் 17,000 ராணுவ வீரர்கள் இந்த போர் ஒத்திகையில் பங்கெடுத்தனர்.

தெற்கு சீனக் கடல் பகுதி மற்றும் மேற்கு பசிபிக் பகுதியில் ரோந்து பணிகளை மேற் கொள்ள நான்கு அதி நவீன போர் கப்பல்களை இந்தியா இந்த வாரம் அனுப்ப உள்ளது.

இவை பின்னர், மலபார் போர் ஒத்திகையில் கலந்து கொள்ள உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்