அமெரிக்காவில் தொற்று பரவல் வேகம் - முகக்கவசம் அணிவதில் தளர்வு வாபஸ்

அமெரிக்காவில் மீண்டும் கொரோனா தொற்று வேகம் எடுத்திருக்கும் நிலையில், தடுப்பூசியை செலுத்தியோர் வைரசை பரப்பலாம் என்ற அச்சம் காரணமாக, முக கவசம் அணிவது அங்கு மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் தொற்று பரவல் வேகம் - முகக்கவசம் அணிவதில் தளர்வு வாபஸ்
x
அமெரிக்காவில் மீண்டும் கொரோனா தொற்று வேகம் எடுத்திருக்கும் நிலையில், தடுப்பூசியை செலுத்தியோர் வைரசை பரப்பலாம் என்ற அச்சம் காரணமாக, முக கவசம் அணிவது அங்கு மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பார்க்கலாம்...

உலகில் கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்ட வல்லரசு நாடான அமெரிக்காவில், தொற்று பரவல் வேகம் அதிகரித்துள்ளது.

தினசரி 50 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா பாதிப்புக்களும், 250 க்கும் அதிகமான உயிரிழப்புகளும் பதிவாகி வருகிறது.  

புளோரிடா, கலிபோர்னியா, டெக்சாஸ், நியூயார்க், இல்லினாய் ஆகிய மாகாணங்களில் பாதிப்புகள் அதிகரித்துள்ளன.

உருமாறிய வைரஸ்கள் கைவரிசை காட்ட தொடங்கியிருக்கும் நிலையில், முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை பின்பற்றுதல் போன்ற பழக்கங்கள் மக்கள் மத்தியில் குறைவதும் பாதிப்பு அதிகரிப்புக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

தடுப்பூசி போடுவதில் ஏற்பட்டுள்ள மந்தமான சூழலும் மற்றொரு காரணமாக சொல்லப்படுகிறது.

கொரோனா விவகாரத்தில் நாடு தவறான பாதையில் போகிறது என எச்சரித்திருக்கும் அதிபர் ஜோ பைடனின் மருத்துவ ஆலோசகர் மருத்துவர் ஆண்டனி பாவுசி, தடுப்பூசி செலுத்துதலை அதிகரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அமெரிக்காவில் மொத்த மக்கள் தொகையில் 49 சதவீதத்தினர் இரு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டு விட்டனர். 

தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களிடம்தான் பரவல் அதிகரித்துள்ளதாகவும் ஆண்டனி பாவுசி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கடந்த ஏப்ரலில் தடுப்பூசி செலுத்தியவர்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை என விலக்கு அளிக்கப்பட்டது.  

தற்போது உருமாறிய வைரஸ் பரவும் சூழலில் அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்நிலையில், பாதிப்பு அதிகமாக காணப்படும் இடங்களில் தடுப்பூசி செலுத்தியவர்கள் முகக்கவசத்தை அணிய வேண்டும் என்றும் பள்ளிகளில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என்றும் அந்நாட்டு நோய் கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்