அதிவேகமாக சென்ற சிகப்பு நிற ஆடி கார் - சினிமா பாணியில் துரத்தி சென்று பிடித்த போலீசார்

அமெரிக்காவில் சந்தேகப்படியான நபரை சினிமா பாணியில் காரில் அதிவேகமாக துரத்தி சென்று போலீசார் கைது செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.
அதிவேகமாக சென்ற சிகப்பு நிற ஆடி கார் - சினிமா பாணியில் துரத்தி சென்று பிடித்த போலீசார்
x
அமெரிக்காவில் சந்தேகப்படியான நபரை சினிமா பாணியில் காரில் அதிவேகமாக துரத்தி சென்று போலீசார் கைது செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. தெற்கு பகுதியில் உள்ள ஒக்லஹோமா நகரின் நெடுஞ்சாலையில் சந்தேகத்திற்கிடமாக சிகப்பு நிற ஆடி கார் ஒன்று செல்ல,  அதனை போலீசார் தடுத்து நிறுத்த முயற்சித்தனர். அந்த கார் நிற்காமல் வேகமாக செல்லவே, மணிக்கு 190 கிலோ மீட்டர் வேகத்தில் சிகப்பு நிற காரை போலீசார் துரத்தி சென்றனர். ஒருகட்டதில் அதிவேகமாக சென்ற போலீசாரின் கார் சிகப்பு  கார் மீது மோதவே, அது சாலையோர தடுப்புகளை உடைத்து கொண்டு புல்தரையில் சென்று நின்றது. வேறு வழியின்றி காரில் இருந்து வெளியேறிய நபர் போலீசாரிடம் சரணடைந்தார். 

Next Story

மேலும் செய்திகள்