ஜப்பானை சீண்டும் தென் கொரியா - டோக்கியோவில் தென்கொரியா தனி உணவகம்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் தங்கள் நாட்டு வீரர்களுக்காக பிரத்யேகமாக உணவு தயாரித்து வழங்குகிறது தென்கொரியா.
ஜப்பானை சீண்டும் தென் கொரியா - டோக்கியோவில் தென்கொரியா தனி உணவகம்
x
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் தங்கள் நாட்டு வீரர்களுக்காக பிரத்யேகமாக உணவு தயாரித்து வழங்குகிறது, தென்கொரியா... அதற்காக அவர்கள் கூறும் காரணம், போட்டியை நடத்தும் ஜப்பானை சீண்டும் வகையில் உள்ளது. இதுபற்றி பார்க்கலாம்....

காய்கறிகள், இறைச்சியை வெட்டுதல்... அவைகளை சமைத்தல், பேக்கிங் செய்தல் என சமையல் கலைஞர்கள் பரபரப்பாக காணப்படும் இந்த சமையலறை, டோக்கியோவில் தங்கள் நாட்டு வீரர்களுக்காக தென் கொரியா அமைத்திருக்கும் பிரத்யேக கூடமாகும்... 

20 நிமிட பயணத்தில் ஒலிம்பிக் கிராமத்தை அடையும் வகையில் இருக்கும் ஹோட்டல் ஒன்றை முழுமையாக வாடகைக்கு எடுத்து, இந்த ஏற்பாட்டை செய்திருக்கிறது தென் கொரியா...

ஒலிம்பிக் கிராமத்தில் தினமும் 50 ஆயிரம் பேருக்கு பிடித்தமான உணவுகளை வழங்க ஜப்பான் மெனக்கட்டிருக்கும் நிலையில்,  தென்கொரிய வீரர்களுக்கு பாரபட்சம் காட்டுகிறதா என்ற கேள்வி எழலாம்... 

ஆனால் அதுதான் இல்லை... 

கொரோனா பாதுகாப்பிற்காக இப்படி ஒரு ஏற்பாட்டை செய்துள்ளதாக கூறுகிறார், இந்த சமையலறையை தலைமையேற்று நடத்தும்  ஹன் ஜூங், 

மேலும் போகிற போக்கில்... புகுஷிமாவிலிருந்து வரும் பொருட்கள் குறித்து மக்கள் மத்தியில் அச்சம் நிலவுவதாகவும் கூறியிருக்கிறார் ஹன் ஜூங்... 

தினசரி 400 டப்பாக்களில் பேக்கிங் செய்யப்படும் உணவுகள், கதிர்வீச்சு பாதிப்புக்கு உள்ளாகாத வகையில் பிரத்யேக ஹீட் பாக்சில் எடுத்துச் செல்லப்படுகிறது.

உணவுக்கூடத்தில் வைக்கப்பட்டிருக்கும் கையேட்டில் கதிர்வீச்சை கட்டுப்படுத்தும் கருவிகளை எவ்வாறு பயன்படுத்துவது எப்படி என்ற விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

காய்கறிகள், இறைச்சியை மட்டும் உள்ளூர் மார்க்கெட்டில் வாங்குவதாகவும், புகுஷிமா உள்பட 8 மாவட்டங்களிலிருந்து வரும் கடல் உணவுகள், பழங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

தென் கொரியாவின் இந்நடவடிக்கையை சமூக வலைதளங்களில் விமர்ச்சிக்கிறார்கள் ஜப்பானியர்கள்....

ஆனால் லண்டன் ஒலிம்பிக் போட்டியிலிருந்து தனியாகவே உணவு தயாரிப்பதாக கூறும் தென் கொரியா ஒலிம்பிக் கமிட்டி, வீரர்களின் பாதுகாப்புக்காக இந்நடவடிக்கையை எடுப்பதாக கூறுகிறது.

கடந்த 2011 ஆம் ஆண்டு புகுஷிமாவில் சுனாமி, அணுஉலை பேரழிவை அடுத்து பாதுகாப்பை காரணம்காட்டி ஜப்பானிலிருந்து கடல் உணவுகளை இறக்குமதி செய்ய தென் கொரியா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



Next Story

மேலும் செய்திகள்