செல்ல பிராணிகளை அனுமதிக்கும் மதுபான விடுதி - நாய்களுக்கான பிரத்யேக பானங்கள்

லண்டனில் ஒரு மதுபான விடுதியில், நாய்களுக்காக, காய் கறிகள், பழங்களில் செய்யப்பட்ட தனித்துவம் மிக்க பானங்கள் வழங்கப்படுகின்றன. அது பற்றிய ஒரு சுவாரஸ்ய தொகுப்பை தற்போது பார்க்கலாம்...
செல்ல பிராணிகளை அனுமதிக்கும் மதுபான விடுதி - நாய்களுக்கான பிரத்யேக பானங்கள்
x
லண்டனில் ஒரு மதுபான விடுதியில், நாய்களுக்காக, காய் கறிகள், பழங்களில் செய்யப்பட்ட தனித்துவம் மிக்க பானங்கள் வழங்கப்படுகின்றன. அது பற்றிய ஒரு சுவாரஸ்ய தொகுப்பை தற்போது பார்க்கலாம்... 

பிரட்டனில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின், இயல்பு நிலை திரும்பி வருகிறது.

பிரட்டன் தலைநகர் லண்டனில் கடந்த மாதம் தொடங்கப்பட்ட ஆஃப்டர் பார்க் (After Bark) என்ற மதுபான விடுதியில், மனிதர்களுக்கு காக்டெயில் வகை மதுபானங்களும், அவர்களுடன் வரும் வளர்ப்பு நாய்களுக்கு பப்டெயில்ஸ் எனப்படும் பழச்சாறு வகைகளும் அளிக்கப்படுகிறது 

பொதுவாக மதுபான விடுதிகளுக்குள் நாய்கள் மற்றும் இதர வளர்ப்பு பிராணிகள் அனுமதிக்கப்படுவதில்லை.

ஆனால் ஏப்டர் பார்க் (After Bark)மதுபான விடுதியில், பல வகையான அழகிய தோற்றம் கொண்ட வளர்ப்பு நாய்களுக்கு கேரட், பீட்ரூட் ஆப்பிள் பழச் சாறுகளை கண்ணாடி டம்பளர்களில் அளிக்கப்படுகின்றன.

அவற்றை மது பான விடுதி பணிப் பெண்கள் லாவகமாக பரிமாறிய பின், போட்டி போட்டுக் கொண்டு வளர்ப்பு நாய்கள் அவற்றை அருந்தி மகிழ்வது பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

பக், லாபரடார், பீக்கீங்கீஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான அழகிய நாய்கள் பப்டெயில்ஸ்களை அருந்துகின்றன

இந்த நாய்களின் உரிமையாளர்கள், அதே மேஜையில் மது பானங்களை அருந்தி மகிழ்கின்றனர்.

நாய்களை வளர்ப்பவர்கள், மது பான விடுதிகளுக்கு செல்லும் போது, தங்களின் நாய்களை பிரிந்து செல்வதை தவிர்க்க இந்த மதுபான விடுதி உதவுகிறது என்று இதன் உரிமையாளர் ஜாமி ஸ்வான் கூறுகிறார்.

Next Story

மேலும் செய்திகள்