ஒலிம்பிக்கில் முதல் பதக்கத்தை வென்றது சீனா

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் முதல் தங்கப் பதக்கத்தை சீனா தட்டிச் சென்று உள்ளது.
x
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் முதல் தங்கப் பதக்கத்தை சீனா தட்டிச் சென்று உள்ளது. பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு துப்பாக்கி சுடுதல் போட்டியின் இறுதிப் போட்டி இன்று நடந்தது. 8 வீராங்கனைகள் கலந்து கொண்ட இறுதிப் போட்டியில், சீன வீராங்கனை யாங் கியான் 251 புள்ளி 8 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். இதன்மூலம், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் முதல் தங்கப் பதக்கம் சீனாவுக்கு கிடைத்து உள்ளது. இந்தப் போட்டியில், ரஷ்ய வீராங்கனை அனஸ்தாஸியா வெள்ளிப் பதக்கத்தையும், சுவிட்சர்லாந்து வீராங்கனை நினா கிறிஸ்டன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்