சுற்றுலா பயணிகளை வரவேற்கும் நாடுகள் - இந்தியர்களுக்கு விசா வழங்கும் நாடுகள்

கொரோனா பரவலின் இரண்டாவது அலை இந்தியாவில் குறைந்துள்ள நிலையில், இந்தியர்களை சுற்றுலா மற்றும் வர்த்தக பணிகளுக்கு வரவேற்கும் நாடுகள் பற்றிய விவரங்களை தற்போது பார்க்கலாம்...
சுற்றுலா பயணிகளை வரவேற்கும் நாடுகள் - இந்தியர்களுக்கு விசா வழங்கும் நாடுகள்
x
உலக அளவில் கொரோனா பரவல் சற்று குறைந்து வரும் நிலையில், சுற்றுலாவை நம்பியுள்ள நாடுகள், மீண்டும் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியுள்ளன. மிக அழகிய, பழம் பெரும் நகரங்கள், மலைப் பகுதிகளைக் கொண்டுள்ள கிழக்கு ஐரோப்பிய நாடான குரேசியா, இந்தியாவில் இருந்து செல்லும் சுற்றுலா பயணிகளை வரவேற்கிறது. வடக்கு ஆப்பரிக்க நாடான மொரோக்கோ, இந்திய சுற்றுலா பயணிகள் மற்றும்  தொழில்துறையினருக்கு விசா வழங்கத் தொடங்கியுள்ளது. மிகப் பசுமையான கிராமப்புறங்களையும், பனி மலைகளையும் கொண்டுள்ள அழகிய நாடான சுவிட்சர்லாந்து, 90 நாட்களுக்கான விசாக்களை இந்திய குடிமக்களுக்கு அளிக்கத் தொடங்கியுள்ளது. வட மேற்கு ஐரோப்பிய நாடான, வரலாற்று புகழ் பெற்ற தளங்களை கொண்ட ஐயர்லாந்து நாட்டிற்கு குறுகிய கால பயணம் மேற்கொள்ள விசா அளிக்கப்படுகிறது.அழகிய நகரங்கள் மற்றும் சுற்றுலா தளங்களை கொண்ட ரஷ்யாவிற்கு செல்ல இந்தியர்களுக்கு விசா அளிக்கப்படுகிறதுஅழகிய கடற்கரை சுற்றுலா தளங்கள், வனப் பகுதிகளை கொண்டுள்ள வங்க தேசம், இலங்கை ஆகிய நாடுகளும், சுற்றுலா மற்றும் வர்த்தகப் பயணிகளுக்காக இந்தியர்களுக்கு விசா வழங்குகின்றன




Next Story

மேலும் செய்திகள்