செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சிகள் - நுண்ணுயிர்கள் இருந்ததா என்று ஆய்வு

செவ்வாய் கிரகத்தின் பாறைகளை சேகரிக்கும் முயற்சியில் நாசா இறங்கியுள்ளது. அது பற்றிய விவரங்களை அலசுகிறது, இந்த தொகுப்பு...
செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சிகள் - நுண்ணுயிர்கள் இருந்ததா என்று ஆய்வு
x
செவ்வாய் கிரகத்தின் பாறைகளை சேகரிக்கும் முயற்சியில் நாசா இறங்கியுள்ளது. அது பற்றிய விவரங்களை அலசுகிறது, இந்த தொகுப்பு... 
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், கடந்த ஆண்டு ஜூலை 30ஆம் தேதி செவ்வாய் கிரகத்தை ஆராய, பெர்சீவரனஸ் ரோவல் கலத்தை ராக்கெட் மூலம் ஏவியது. 

கடந்த பிப்ரவரி 18இல் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய இந்த ரோவர் கலம், பல்வேறு சோதனை ஓட்டங்களை மேற்கொண்ட பின், கடந்த ஐந்து மாதங்களில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் பயணித்து ஜெசரோ என்ற பள்ளத்தாக்கை சென்றடைந்துள்ளது.

BREATH....

அடுத்த இரண்டு வாரங்களில், செவ்வாய் கிரகத்தின் தரை தளத்தில் இருந்து பாறைகளை சேகரிக்க உள்ளது. 

இதற்கு ஏழு அடி நீளம் கொண்ட ரோபோ கரம் ஒன்றை பயன்படுத்த உள்ளது.

லேசர் கதிர்களை பாறையின் மீது செலுத்தி, அதன் விளைவுகளையும் ஆராய உள்ளது.

செவ்வாய் கிரகத்தில் பல லட்சம் வருடங்களுக்கு முன்பு  நுண் உயிரனங்கள் இருந்திருக்க வாய்ப்புள்ளதா என்பதை இந்த சோதனைகள் மூலம் கண்டறிய முயற்சிக்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்