கொட்டித் தீர்த்த கனமழை - சீனாவைப் புரட்டிப் போட்ட வெள்ளம்

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் பெய்து வரும் கனம்ழை காரணமாக இதுவரை குறைந்த பட்சம் 25 பேராவது உயிரிழந்திருக்கலாம் என்று அம்மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொட்டித் தீர்த்த கனமழை - சீனாவைப் புரட்டிப் போட்ட வெள்ளம்
x
சீனாவின் ஹெனான் மாகாணத்தில் பெய்து வரும் கனம்ழை காரணமாக இதுவரை குறைந்த பட்சம் 25 பேராவது உயிரிழந்திருக்கலாம் என்று அம்மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்கணக்காக பெய்து வரும் கன மழையால், பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகள், சாலைகள், மற்றும் வாகனங்கள் வெள்ள நீரில்  மூழ்கின. மேலும் அணைகள், நீர்த்தேக்கங்கள் அவற்றின் கொள்ளளவைக் கடந்து நிரம்பியுள்ளன. ஹெனான் மாகாண தலைநகரான ஜங்ஜவ் பகுதியில், தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு வெள்ள நீர் புகுந்ததால் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. அப்பகுதியில் இருந்து 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பு கருதி மீட்கப்பட்டனர். மெட்ரோ ரயிலில் புகுந்த நீரில் சிக்கி 12 பேர் உயிரிழந்த நிலையில், சுரங்கப்பாதையில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இராணுவத்தினர் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் பருவ நிலை மாற்றமே காரணமாக பார்க்கப்படும் நிலையில், 3 நாட்களில் பெய்துள்ள கனமழை ஆயிரம் வருடங்களுக்கு ஒரு முறை பெய்யும் மழையை ஒத்தது என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்