விண்வெளி சுற்றுலா திட்ட போட்டி - பில்லியனர்கள் சென்ற தூரம் எவ்வளவு?
பதிவு : ஜூலை 21, 2021, 06:36 PM
விண்வெளி சுற்றுலா திட்ட போட்டியிலிருக்கும் பில்லியனர்கள் விண்ணில் சென்றுவந்த தூரம் எவ்வளது... விண்வெளியில் விமானங்கள் எதுவரையில் பறக்கலாம்...? எதுவரையில் ஏவுகணைகள் பறக்கலாம்...? என்பதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
விண்வெளி சுற்றுலா திட்ட போட்டியிலிருக்கும் பில்லியனர்கள் விண்ணில் சென்றுவந்த தூரம் எவ்வளது... விண்வெளியில் விமானங்கள் எதுவரையில் பறக்கலாம்...? எதுவரையில் ஏவுகணைகள் பறக்கலாம்...? என்பதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு... 

விண்வெளி பயணத்தை, சாமானியர்கள் சென்று வரும் சுற்றுலா பயணமாக்கி விட வேண்டும் என்ற போட்டியில் உலகின் பெரும் கோடீஸ்வரர்களான எலான் மஸ்க், ரிச்சர்ட் பிரான்சன் மற்றும் ஜெப் பெசோஸ் ஆகியோர் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். 

இதில் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், 2020 ஆம் ஆண்டே 'க்ரூ ட்ராகன்' விண்வெளி ஓடம் மூலம் நாசா வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அழைத்துச் சென்று திரும்பியது. 

இரண்டாவதாக கடந்த 11 ஆம் தேதி பிரிட்டன் தொழில் அதிபர் ரிச்சர்ட் பிரான்சன் தமது குழுவுடன் ராக்கெட் விமானம் மூலம் விண்வெளி சென்று திரும்பிய நிலையில், அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் கேப்சூல் விண்கலம் மூலம் விண்வெளி சென்று திரும்பியிருக்கிறார். 

ரிச்சர்ட் பிரான்சனும், ஜெப் பெசோசும் விண்வெளியில் புவியீர்ப்பு விசையில்லாத ஜீரோ கிராவிட்டி பகுதிக்கு சென்று அங்கு சில நிமிடங்கள் மிதக்கும் சூழலை உணர்ந்ததும், பூமிக்கு திரும்பியுள்ளனர்.

அதாவது ஜெப் பெசோஸ் 66.5 மையில் உயரம் வரையிலும், ரிச்சர்ட் பிரான்சன் 53.43 மையில் உயரம் வரையிலும் பயணித்து இருக்கின்றனர்.

வளிமண்டலத்தின் பண்பும், கட்டமைப்பும் உயரே செல்ல செல்ல, மாறுபடும் சூழல் மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

இதில் பூமியின் மேற்பரப்பில் 7 மைல் உயரம் வரையிலான வளிமண்டல பகுதி ட்ரோப்போஸ்ஃபியர் என்றும்

அங்கிருந்து 31 மைல் உயரம் வரையில் ஸ்ட்ரேட்டோஸ்ஃபியர் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த உயரம் வரையில்தான் விமானங்கள் பறக்க முடியும்.  

அதற்கு மேல் 50 மைல் உயரம் வரையில் உள்ள மெஸோஸ்ஃபியர் மண்டலம், விண்கற்கள் பறக்கும் பகுதியாகும்.
 
62 மைல் உயரத்திலிருக்கும் கார்மன் லைனுக்கு அப்பால், 

440 மைல் உயரம் வரையில் தெர்மோஸ்ஃபியர் என அழைக்கப்படுகிறது. இங்குதான் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் அமைந்திருக்கிறது. விண்ணுக்கு அனுப்பப்படும் ஏவுகணைகள் இதுவரையில்தான் பறக்க முடியும். 

அதற்கு மேல் 440 மைல் முதல் 6 ஆயிரத்து 200 மைல் வரையிலான உயரம் வரையிலான பகுதியை, எக்ஸோஸ்ஃபியர் என அழைக்கின்றனர். இந்த உயரத்தில் தான் விண்வெளிக்கலங்கள் பயணம் செய்ய முடியும்.


தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

148 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

138 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

87 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

10 views

பிற செய்திகள்

2032-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் பிரிஸ்பேன் நகரில் நடைபெறும் - சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அறிவிப்பு

2032-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் பிரிஸ்பேன் நகரில் நடைபெறும் - சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அறிவிப்பு

11 views

ஒரு மணி நேரத்தில் பெய்த பேய் மழை : வெள்ளத்தில் மிதக்கும் சீன நகரம்.. நீரில் மூழ்கிய சுரங்க மெட்ரோ ரயில்

ஒரு மணி நேரத்தில் பெய்த பேய் மழை : வெள்ளத்தில் மிதக்கும் சீன நகரம்.. நீரில் மூழ்கிய சுரங்க மெட்ரோ ரயில்

10 views

விண்வெளிக்கு சென்று வந்த ஜெஃப் பெசோஸ் குழு.. சாதனை பயணம் சாத்தியமானது எப்படி?

விண்வெளிக்கு சென்று வந்த ஜெஃப் பெசோஸ் குழு.. சாதனை பயணம் சாத்தியமானது எப்படி?

8 views

கண்கவர் வண்ணங்களில் புதிய விமானம் - செக்மேட் திட்டத்தின் கீழ் ரஷ்யா உருவாக்கம்

ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தின் முன்மாதிரியை ரஷ்யா வெளியிட்டுள்ளது.

28 views

விண்வெளிக்கு சென்று திரும்பிய ஜெஃப் பெசோஸ் - 10.10 நிமிடங்கள்... சாகச பயணம்

10 நிமிடங்களில் விண்வெளிக்கு சென்று திரும்பி அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் குழுவினர் சாதனை படைத்துள்ளனர்.

777 views

கனமழை, வெள்ளத்தில் மிதக்கும் மாகாணம் - அவசர கால பணியை துரிதப்படுத்திய சீன அரசு

சீனாவில் கடுமையான வெள்ளத்திற்கு மத்தியில் சிக்கிய மெட்ரோ ரயிலில் இருந்த பயணிகளில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

29 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.