சவுதி அரேபியாவில் ஹஜ் புனித பயணம் - பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன...?

சவுதி அரேபியாவில் ஹஜ் புனித பயணம் தொடங்கியிருக்கும் நிலையில் மக்காவில் செய்யப்பட்டுள்ள கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்...
சவுதி அரேபியாவில் ஹஜ் புனித பயணம் - பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன...?
x

60 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி

கட்டுப்பாடுகளுடன் புனித பயணம்

சவுதி அரேபியாவில் ஹஜ் புனித பயணம் தொடங்கியிருக்கும் நிலையில் மக்காவில் செய்யப்பட்டுள்ள கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்...

பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமியர் ஓவ்வொரும் தன் ஆயுளில் ஒரு முறையேனும் செய்ய வேண்டிய ஹஜ் புனித பயணத்தை தொடங்குவது வழக்கம்... 

வழக்கமாக பக்ரீத் பண்டிகையையொட்டி  உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள், மக்கா மற்றும் மதினா நகருக்கு வருகை தருவார்கள். 2019 ஆம் ஆண்டு 25 லட்சம் பேர் ஹஜ் புனித பயணம் மேற்கொண்டிருந்தனர்.

கொரோனா தொற்று பரவல் அச்சம் காரணமாக கடந்த ஆண்டு சில ஆயிரம் பேருக்கு மட்டும் அரசு அனுமதியளித்திருந்தது. அதேபோன்று இவ்வாண்டும் கட்டுப்பாட்டுடன் பயணம் தொடங்கியிருக்கிறது.  

இவ்வாண்டு பயணம் மேற்கொள்ள 60 ஆயிரம் பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  

உள்நாட்டில் வசிக்கும் 18  முதல் 65 வயதுடையவர்கள் தடுப்பூசியை போட்டியிருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மக்காவிற்கு வெளியே புனித பயணம் மேற்கொள்வோருக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுகிறது.

பயணம் மேற்கொள்வோர் முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  

புனித பயணம் மேற்கொள்வோருக்கு ரோபோக்கள் மூலம் புனிதநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

500 சுகாதார பணியாளர்கள் உதவிக்காக பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கும் 6 ஆயிரம் பேர் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் 

ஒரு குழு சென்று வந்ததும் கிருமிநாசினி தெளித்து அடுத்த குழு அனுமதிக்கப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை அங்கி அணிந்து குடை பிடித்தவாறு, முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து தங்கள் புனித பயணத்தை ஏராளமானோர் மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்