தென் ஆப்பிரிக்காவில் கலவரம் - இந்திய வம்சாவளியினர் கடைகள் சூறை

தென் ஆப்பிரிக்காவில் இந்திய வம்சாவளியினருக்கு எதிராக புகைந்துவரும் சூழலை ஆய்வு செய்ய அதிபர் சிறில் ரமபோசா தலைவர்களை அனுப்பியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் கலவரம் - இந்திய வம்சாவளியினர் கடைகள் சூறை
x

முன்னாள் அதிபரின் சிறைக்கு எதிர்ப்பு
கலவரத்தில் இந்தியர்கள் மீது தாக்குதல்
சமூக வலைதளத்தில் போலியான தகவல்
இந்தியர்கள் - கருப்பினத்தவர்கள் மோதல்
பாதுகாப்பை உறுதி செய்ய இந்தியா வலியுறுத்தல்
கூடுதல் பாதுகாப்பு படையினர் குவிப்பு

தென் ஆப்பிரிக்காவில் இந்திய வம்சாவளியினருக்கு எதிராக புகைந்துவரும் சூழலை ஆய்வு செய்ய  அதிபர் சிறில் ரமபோசா தலைவர்களை அனுப்பியுள்ளார்.  

தென் ஆப்பிரிக்காவில் ஊழல் வழக்கில் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவுக்கு 15 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனையடுத்து அவரை விடுதலை செய்யக்கோரி நாடு முழுவதும் அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டம் படிப்படியாக கலவரமாகியது. 

தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர் அதிகமாக வாழும் கவுடெங் மாகாணத்தின் ஜோக்னோபர்க், பீட்டர்மார்டிஸ்பர்க் நகரங்களிலும், குவாசுலு-நதால் மாகாணத்தின் டர்பன் நகரங்களிலும் வன்முறையில் இறங்கியவர்கள், இந்தியர்கள் நடத்திய கடைகளை சூறையாடினர். 

தொலைக்காட்சி பெட்டி, வாஷிங்மிஷின் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் உள்பட பல வீட்டு தேவைக்கான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.

டர்பன் மேயரின் சமூகவலைதள பதிவு தவறாக சித்தரிக்கப்பட்டு பரவியதே இந்தியர்கள், இந்திய வம்சாவளியினரை குறிவைத்து கருப்பினத்தவர்கள் தாக்குதல் நடத்துவதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.  
 
கலவரத்தில் 117 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கலவரத்தை தூண்டியதாக 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

10 ஆயிரத்திற்கும் அதிகமான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்தியர்களின் உயிருக்கும், உடைமைக்கும், பொருளாதாரத்திற்கும் அச்சுறுத்தும் விவகாரத்தை மத்திய அரசு தென் ஆப்பிரிக்க அரசிடம் எடுத்துச் சென்றுள்ளது. 

நிலை குறித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் நலடி பண்டோரிடம் பேசியிருப்பதாக கூறியிருக்கும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சட்டம் ஒழுங்கு நிலைநிறுத்த அனைத்து நடவடிக்கைகளையும் தென் ஆப்பிரிக்கா அரசு எடுத்துவருவதாக பண்டோர் உறுதியளித்துள்ளார் எனக் கூறியுள்ளார்.

இயல்பு நிலையையும், அமைதியையும் மீட்டெடுக்க முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்து உள்ளார்.  இந்திய தூதரகமும் உள்ளூர் தலைவர்களுடன் தொடர்பில் இருப்பதாக தெரிவித்து உள்ளது. 

இந்நிலையில் இந்திய வம்சாவளியினருக்கு எதிராக புகைந்துவரும் சூழலை ஆய்வு செய்ய போலீஸ் அமைச்சர் உள்ளிட்ட தலைவர்களை அதிபர் சிறில் ரமபோசா அனுப்பியிருக்கிறார் எனவும் தெரியவந்துள்ளது...

Next Story

மேலும் செய்திகள்