ஷாங்காயில் விண்வெளி அருங்காட்சியகம் - விண்வெளிக்கே சென்று திரும்பும் அனுபவம்

சீனாவின் ஷாங்காயில் உள்ள விண்வெளி அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.
ஷாங்காயில் விண்வெளி அருங்காட்சியகம் - விண்வெளிக்கே சென்று திரும்பும் அனுபவம்
x
சீனாவின் ஷாங்காயில் உள்ள விண்வெளி அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. அங்குள்ள திஷுய் ஏரி அருகே அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகம் சுமார் 58 ஆயிரத்து 600 சதுர மீட்டர் பரப்பளவில் பிரமாண்டமாக காட்சியளிக்கிறது. நிஜத்தில் விண்வெளிக்கே சென்று திரும்புவது போன்ற பிரமிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகள் நிச்சயம் பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும்.  இரவு வானில் நட்சத்திரங்கள் ஒளிர்வது போன்று காட்சியமைப்புகள், எல்இடி திரைகள் மூலம் ஒளிர்கின்றன. விண் வெளியிலிருந்து பூமியை பார்ப்பது போன்ற தோற்றமும் பிரமாண்ட திரைகள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்களிடம் விண்வெளி குறித்த புரிதலை ஏற்படுத்த இந்த அருங்காட்சியகம் பெரிதும் உதவும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்