முன்னாள் அதிபர் ஜூமாவிற்கு சிறை - இந்திய வம்சாவளியினர் பாதிப்பு

தென் ஆப்பரிக்காவின் முன்னாள் அதிபருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு பின்னர் நடைபெற்ற கலவரங்களில், இந்தியர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபற்றி பார்க்கலாம்....
முன்னாள் அதிபர் ஜூமாவிற்கு சிறை - இந்திய வம்சாவளியினர் பாதிப்பு
x
தென் ஆப்பரிக்காவில் நூறாண்டுக்கும் மேலாக ஏராளமான இந்தியர்கள் மற்றும் அவர்களின் வம்சாவளியினர் வசிக்கின்றனர். இவர்களில் பலரும் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள். டர்பன் நகரில் மிக அதிக எண்ணிக்கையில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர், பல்வேறு துறைகளில் தொழில்முனைவோர்களாக, வணிகர்களாக முன்னேற்றியுள்ளனர்.
கடந்த வாரத்தில் தென் ஆப்பரிக்காவின் முன்னாள் அதிபர் ஸூமாவிற்கு ஒரு ஊழல் வழக்கில் 15 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்ட பின், அவரின் ஆதரவாளர்கள் பல இடங்களில் வன்முறையில் ஈடுபட்டு, சாலைகளை மறித்தனர். சமூக விரோத கும்பல்கள் இதைப் பயன்படுத்தி கடை தெருக்கள், மால்கள், விற்பனையகங்களை சூறையாடின. இதைத் தடுக்க ராணுவம் களம் இறக்கப்பட்டது.டர்பன், ஜோஹனஸ்பர்க் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நடைபெற்ற வன்முறைகள், சூறையாடல்களில் ஏராளமான இந்திய வம்சாவளியினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பலரும் தங்களின் கடைகள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர்.இந்திய வம்சாவளியினருக்கு பாதுகாப்பை உறுதி செய்யும்படி, தென் ஆப்பரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் நலேடி பன்டர் உடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்  தொலைபேசி மூலம் வலியுறுத்தியுள்ளார். 




Next Story

மேலும் செய்திகள்