உலக தலைவர்களின் சமையல் நிபுணர்கள் - பிரெஞ்சு சமையல் கலை பற்றி ஆய்வு

20 உலகத் தலைவர்களின் தலைமை சமையல் நிபுணர்கள் ஒரே இடத்தில் முகாமிட்டு, பிரெஞ்சு சமையல் கலை பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
உலக தலைவர்களின் சமையல் நிபுணர்கள் - பிரெஞ்சு சமையல் கலை பற்றி ஆய்வு
x
 தலை சிறந்த சமையல் நிபுணர்கள் பற்றிய சுவாரஸ்ய தொகுப்பை தற்போது பார்க்கலாம்... சமையல் கலைக்கு புகழ்பெற்ற பிரான்ஸ் நாட்டின் உணவு பதார்த்தங்கள் உலகின் பல பகுதிகளுக்கும் பரவியுள்ளன. கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில், பிரான்ஸில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளத்தப்பட்ட பின், பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள், பாரிஸ் நகருக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.இந்நிலையில் 20 உலக நாடுகளின் தலைவர்களின் தலைமை சமையல் நிபுணர்கள் பாரிஸ் நகருக்கு வந்து, குழுமியுள்ளனர். அடுத்த ஒரு வார காலத்திற்கு பிரான்ஸ் நாட்டில் சமையல் கலையின் நுட்பங்கள் பற்றி ஆராய உள்ளனர்.பிரட்டன் பிரதமர், ரஷ்ய அதிபர், பிரான்ஸ் அதிபர் மற்றும் அமெரிக்க அதிபர் ஆகியோரின் தலைமை சமையல் நிபுணர்களும் இந்த குழுவில் உள்ளனர் பிரான்ஸின் வெளியுறவுத் துறை அமைச்சரகத்தின் சமையலறையில் இவர்கள் அனைவரும் இணைந்து ஒரு விருந்தை தயாரித்தனர்.பின்னர் இவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து புகைபடம் எடுத்து கொண்டனர். சமையல் கலை நிபுணர் அணியும் தொப்பியை அணிந்து, பின்னர் அவற்றை மேலே தூக்கி வீசி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.அரசியல் மக்களை பிரித்தால், உணவு அவர்களை இணைக்கும் என்று பிரான்ஸ் நாட்டின் உணவுக் கலைக்கான தூதுவர் கோமெஸ் கூறுகிறார்.



Next Story

மேலும் செய்திகள்