ஆப்கானில் முன்னேறும் தலிபான் படைகள் - பாகிஸ்தான் எல்லையை பிடித்த தலிபான்

ஆப்கானிஸ்தானில் தலிபான் படைகள் முன்னேறி வரும் நிலையில், பாகிஸ்தான் விமானப்படை தங்கள் அரசு படைகளை மிரட்டுவதாக ஆப்கானிஸ்தான் துணை அதிபர் பரபரப்பு புகார் ஒன்றை கூறியுள்ளார்.
ஆப்கானில் முன்னேறும் தலிபான் படைகள் - பாகிஸ்தான் எல்லையை பிடித்த தலிபான்
x
ஆப்கானிஸ்தானில் தலிபான் படைகள்  முன்னேறி வரும் நிலையில், பாகிஸ்தான் விமானப்படை தங்கள் அரசு படைகளை மிரட்டுவதாக ஆப்கானிஸ்தான் துணை அதிபர் பரபரப்பு புகார் ஒன்றை கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானில் நடப்பது என்ன என்பதை விவரிக்கிறது, இந்த தொகுப்பு... ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதும் மொத்த நாட்டையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் தலிபான் படைகள் இறங்கியுள்ளன.தஜிகிஸ்தான் எல்லையையொட்டிய படாக்ஸ்கான் மற்றும் பாகிஸ்தான் எல்லையையொட்டி கந்தகார் மாகாணங்களில் பல நகரங்களை கைப்பற்றியிருக்கும் தலிபான் படைகள், 85 சதவீத பகுதிகளை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக கூறியுள்ளது. இதற்கிடையே போரிட முடியாத அரச படை வீரர்கள் தலிபான்களிடம் சரணடைவதாகவும், சிலர் தஜிகிஸ்தானுக்கு தப்பியோடுவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறன. இருதரப்பு சண்டையில் சில மாவட்டங்களை தங்கள் தரப்பு கைப்பற்றியிருப்பதாக அரச படைகள், தலிபான்களை பல இடங்களில் சுட்டு வீழ்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளன.  இதில் முக்கியமாக தலிபான்கள் பாகிஸ்தானிற்கு செல்லும் வெஷ்- சாமன் எல்லையை கைப்பற்றி தங்கள் கொடியை பறக்கவிட்டுள்ளனர். இந்த வெற்றி தலிபான்கள் பாகிஸ்தான் வழியாக அரபிக்கடலில் தடம்பதிக்க மிக முக்கிய பகுதியாக பார்க்கப்படுகிறது.பிராந்தியத்தில் தலிபான்களுக்கு கூடுதல் பலத்தை வழங்கவல்ல இந்த எல்லையை மீட்க ஆப்கானிஸ்தான் ராணுவப்படைகள் போரிட்டு வருகின்றன.ஒட்டுமொத்தமாக ஜனநாயக அரசை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கும் தலிபான் படைகளுக்கு பாகிஸ்தான் முழு ஆதரவையும் வழங்குவதாக ஆப்கானிஸ்தான் அரசு குற்றம் சாட்டியுள்ளது. வெஷ்- சாமன் எல்லையில் இருந்து தலிபான்களை வெளியேற்ற முயற்சித்தால் பதிலடி கொடுப்போம் என ஆப்கான் ராணுவம் மற்றும் விமானப்படைக்கு பாகிஸ்தான் விமானப்படை மிரட்டல் விடுத்து உள்ளதாக ஆப்கன் துணை அதிபர் அம்ருதுல்லா சலாக் கூறியுள்ளார். தலிபான்களுக்கு பாகிஸ்தான் ராணுவம் வான்படை உதவியை வழங்குகிறது எனக் குற்றம் சாட்டியிருக்கும் அவர், தேவைப்பட்டால் முழு ஆதரத்தையும் வழங்குவதாக தெரிவித்து இருக்கிறார்.இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் நடக்கும் சம்பவங்களுக்கு தங்களை குற்றம் சாட்டுவது சரியானது இல்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியிருக்கிறார்.

Next Story

மேலும் செய்திகள்