அமெரிக்காவில் பரவும் டெல்டா வைரஸ் - நாளுக்கு நாள் அதிகரிக்கும் தினசரி பாதிப்பு

அமெரிக்காவில் கொரோனா தொற்றுதல்கள் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், லாஸ் ஏஞ்செல்ஸ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் முகக்கவசங்கள் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பரவும் டெல்டா வைரஸ் - நாளுக்கு நாள் அதிகரிக்கும் தினசரி பாதிப்பு
x
அமெரிக்காவில் கொரோனா தொற்றுதல்கள் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், லாஸ் ஏஞ்செல்ஸ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் முகக்கவசங்கள் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கொரோனா பரவல் குறைந்த பின், சில மாதங்களுக்கு முன்பு, முகக்கவசம் அணிவது பற்றி குழப்பமான சூழல் உருவானது.தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை எடுத்துக் கொண்டவர்களுக்கு முகக்கவசம் தேவையில்லை என்று கடந்த மே மாதத்தில் அமெரிக்க அரசின் நோய் கட்டுப்பாடு மையம் அறிவித்திருந்தது. ஆனால் ஒரு சில மாகாணங்கள் மற்றும் அலுவலகங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டிருந்தால் குழப்பமான சூழல் உருவானது.லாஸ் ஏஞ்செல்ஸ், முகக் கவசங்கள், அமெரிக்க நகரங்கள், தடுப்பூசி விநியோகம்சமீப வாரங்களில் அமெரிக்காவில் டெல்டா வைரஸ் பரவலினால் கொரோனா தொற்றுதல்கள் அதிகரித்து வருகிறது. ஜூன் 15இல்11,872ஆக இருந்த தினசரி தொற்றுதல்களின் அளவு, ஜூலை 15இல் 35,561ஆக அதிகரித்துள்ளது.இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நகரமான லாஸ் ஏஞ்செல்ஸில் உள்ள அலுவலகங்கள், உள் அரங்குகள், கட்டிடங்களுக்குள் முகக்கவசங்கள் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 
லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் கடந்த ஆறு நாட்களாக தினசரி தொற்றுதல்களின் எண்ணிக்கை1000க்கும் அதிகமாக தொடர்வதால், தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இதே போல சாக்ரமென்டோ, ஆஸ்டின் போன்ற பல்வேறு நகரங்ககளில் முகக்கவசங்கள் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவில் 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரையில் 48 சதவீதத்தினருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்