மேற்கு ஐரோப்பாவில் மழை, வெள்ளம் - ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயம்

மேற்கு ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி மற்றும் பெல்ஜியத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் ஆயிரக்கணக்கானோர் மாயமாகியுள்ளனர்.
மேற்கு ஐரோப்பாவில் மழை, வெள்ளம் - ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயம்
x
மேற்கு ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி மற்றும் பெல்ஜியத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் ஆயிரக்கணக்கானோர் மாயமாகியுள்ளனர். மக்களின் வழக்கமான வாழ்க்கையை புரட்டி போட்ட பேய் மழை பற்றி விவரிக்கிறது, இந்த தொகுப்பு...மேற்கு ஐரோப்பாவில் வியாழன் அன்று பெரும் மழை பொழிவு ஏற்பட்டதால், பல நதிகளில்
வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, கரைகள் உடைந்து, குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் பாய்ந்தது.ரைன், அஹர், மீசே ஆகிய நதிகளில் வெள்ளப் பெருக்கு பெரிய அளவில் உருவானதால், ஜெர்மனியின் தென் மேற்கு பகுதிகளில் ஏராளமான வீடுகள், குடியிருப்புகள், கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
ஜெர்மனியின் அண்டை நாடுகளான பெல்ஜியம், நெதர்லாந்து, லக்ஸம்பர்க், சுவிஸ்சர்லாந்த் ஆகிய நாடுகளிலும் வெள்ளச் சேதம் ஏறப்பட்டுள்ளது. ஜெர்மனியில் 81 பேரும், பெல்ஜியத்தில் 11 பேரும் மழை வெள்ளத்திற்கு பலியாகினர்.ஒரு சில கரையோர கிராமங்கள் முற்றிலும் அழிந்துள்ளன.  வெள்ளத்தில் சிக்கி மாயமான ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.புவி வெப்பமயதாலினால் ஏற்பட்ட பருவ நிலை மாற்றம் தான் இந்த திடீர் மழை, வெள்ளத்திற்கு காரணம் என்று பல்வேறு செயல்பாட்டாளார்கள், பருவநிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்