தந்தையின் கட்டுப்பாட்டை எதிர்த்து பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் வழக்கு

தனது தந்தைக்கு எதிராக சட்ட போராட்டம் நடத்தி வரும் பிரபல பாப் பாடகி, பிரிட்னி ஸ்பியர்ஸ்க்கு சற்று சாதகமான உத்தரவை நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. அது பற்றி விவரிக்கிறது, இந்த தொகுப்பு...
தந்தையின் கட்டுப்பாட்டை எதிர்த்து பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் வழக்கு
x
40 வயதான, பாப் பாடகி பிரட்னி ஸ்பியர்ஸின் இசைத்தட்டுகளின் விற்பனை, உலக அளவில் 10 கோடியை தாண்டியுள்ளது. பெரும் புகழ், பணம் ஈட்டியுள்ள பிரட்டனி ஸ்பியர்ஸின் சொந்த வாழ்க்கையில் ஏராளமான சிக்கல்கள், சோகங்கள் மற்றும் பிரச்சனைகள் தொடர்கின்றன. இரண்டு முறை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றுள்ள பிரட்டனி ஸ்பியர்ஸுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். போதை மருந்து பழக்கத்திற்கு அடிமையான காரணத்திற்காக 2007இல் இவர்களின் மகன்களை இவரிடம் இருந்து பிரித்து, அவர்களின் தந்தையிடம் நீதிமன்றம் ஒப்படைத்தது. 2008இல் மன நலம் பாதிக்கப்பட்டு, ஒரு மனநல சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் குணமடைந்து, தொடர்ந்து பாப் இசைப் பாடல்களை பாடி வந்தார். இவரின் நிதி விவகாரங்கள், வரவு செலவு கணக்குகளை மேற்பார்வை செய்யும் அதிகாரத்தை இவரின் தந்தை ஜேமி ஸ்பியர்ஸிடம் 2008இல் லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் அளித்தது. சில மாதங்களுக்கு முன்பு தனது நிதி விவகாரங்களை தனது தந்தையின் மேற்பார்வையில் இருந்து தனக்கு மாற்றியளிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். கடந்த மாதம் லாஸ் ஏஞ்செல்ஸ் நீதிமன்றத்தில், காணொளி மூலம் ஆஜரான பிரட்டனி ஸ்பியர்ஸ் கண்ணீர் மல்க தனது தந்தையிடம் இருந்து தன்னை விடுவிக்கும்படி வேண்டினார். புதன் அன்று நடந்த வழக்கு விசாரணையில், மாத்யு ரோசெஙர்ட் (Mathew Rosengart)என்ற புதிய வழக்கறிஞரை நியமித்துக் கொள்ள அவருக்கு லாஸ் ஏஞ்செல்ஸ் நீதிமன்ற நீதிபதி அனுமதியளித்தார். பிரட்டனி ஸ்பியர்ஸின் தந்தையின் கட்டுப்பாட்டில் இருந்து அவரை விடுவிக்கும்படி புதிய மனு ஒன்றை தாக்கல் செய்ய உள்ளதாக மாத்யு ரோசெங்ர்ட்  (Mathew Rosengart) கூறியுள்ளார். தந்தைக்கு எதிரான சட்ட போராட்டத்தில் பிரிட்னி பியர்ஸ்க்கு கிடைத்த ஆறுதல் இது என அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்