வீட்டை ஜிம் ஆக மாற்றும் சீனர்கள் - ஸ்மார்ட் கண்ணாடிகள் முன்னால் உடற்பயிற்சி

வீட்டிலேயே உடற்பயிற்சி செய்ய ஸ்மார்ட் திரைகள் கொண்ட, கண்ணாடிகள் பயன்பாடு சீனாவில் அதிகரித்துள்ளது.
வீட்டை ஜிம் ஆக மாற்றும் சீனர்கள் - ஸ்மார்ட் கண்ணாடிகள் முன்னால் உடற்பயிற்சி
x
வீட்டிலேயே உடற்பயிற்சி செய்ய ஸ்மார்ட் திரைகள் கொண்ட, கண்ணாடிகள் பயன்பாடு சீனாவில் அதிகரித்துள்ளது. அது பற்றிய ஒரு சுவாரஸ்ய தொகுப்பை தற்போது பார்க்கலாம்...

மனிதர்கள் இடையே மிகப்பெரும் இடைவெளியை ஏற்படுத்தி விட்டது, கொரோனா...

வேலை முதல் உடற்பயிற்சி வரை அனைத்தும் வீட்டிற்குள்ளே என்ற நிலையிலேயே இன்றைய காலம் நகர்ந்து கொண்டிருக்கிறது. 

அப்படி, வீட்டிலேயே உடற்பயிற்சி செய்யும் முறை சீனாவில் அதிகரித்து வருகிறது. 

வீட்டை ஜிம்மாக மாற்ற முயற்சி செய்யும் உடற்பயிற்சி விரும்பிகளின் விருப்பமாக அமைந்துள்ளது, இந்த ஸ்மார்ட் கண்ணாடிகள்...

ஹெ.டி திரைகள் கொண்ட ஸ்மார்ட் நிலைக் கண்ணாடிகள் முன்பு உடற்பயிற்சி, யோகப் பயிற்சிகள் செய்யும் முறை சீனாவில் பரவலாகி வருகிறது

இவற்றின் மூலம் ஆன்லைன் உடற்பயிற்சி வகுப்புகளில் வீடுகள் இருந்தபடி கலந்து கொள்வது மிகுந்த வசதியாக இருப்பதாக இளைஞர்கள் கூறுகின்றனர்


குத்து சண்டை, யோகா மற்றும் பல்வேறு வகையான உடற்பயிற்சிகளை மேற்கொள்பவர்களின் செயல் திறன், பயிற்சியின் கால அளவு, எண்ணிக்கை ஆகியவற்றை ஸ்மார்ட் நிலைக்கணாடியின் தொடு திரையில் பதிவு செய்து, கண்காணிக்க முடிகிறது

இவ்வகை ஸ்மார்ட் நிலைக்கண்ணாடிகள் ஜிம் அல்லது யோகா பயிற்சி மையத்திற்கு செல்வதை விட மலிவான, எளிமையான விசியமாக உள்ளதாக இவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் இவ்வகை நிலைக்கண்ணாடிகளில், உடற்பயிற்சி செய்பவரின் முழு உருவம் சில சமயங்களில் பதிவாகுவதில்லை என்று நிஞ் ஜி என்ற உடற்பயிற்சி ஆசிரியர் கூறுகிறார்.

எனினும், ஆன்லைன் விற்பனை தளங்கள் மூலம் ஸ்மார்ட் நிலைக்கண்ணாடிகளின் விற்பனை சமீப மாதங்களில் சீனாவில் அதிகரித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்