இந்தோனேசியாவில் கொரோனா தொற்று; ஆசியாவின் பரவல் மையமாக மாறியது - சுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரிக்கை

கொரோனா தொற்று அதிகம் காணப்படும் இந்தோனேசியா, ஆசியாவின் கொரோனா வைரஸ் பரவல் ஹாட்ஸ்பாட் மாறியுள்ளது. நோயாளிகளால் மருத்துவமனைகளும், சடலங்களால் மயானமும் நிரம்பும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் கொரோனா தொற்று; ஆசியாவின் பரவல் மையமாக மாறியது - சுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரிக்கை
x

தினசரி பாதிப்பில் இந்தியாவை முந்தியது
நோயாளிகளால் நிரம்பும் மருத்துவமனைகள்

சடலங்களால் நிரம்பும் மயானங்கள்
 "இந்தியா போன்று பேரழிவை சந்திக்க நேரிடும்"


கொரோனா தொற்று அதிகம் காணப்படும் இந்தோனேசியா, ஆசியாவின் கொரோனா  வைரஸ் பரவல் ஹாட்ஸ்பாட் மாறியுள்ளது. நோயாளிகளால் மருத்துவமனைகளும், சடலங்களால் மயானமும் நிரம்பும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் பரவல் ஜெட் வேகத்தில் செல்கிறது. 

இதுவரை இல்லாத வகையில் தினசரி பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டிச் செல்கிறது. இதனால் மொத்த பாதிப்பு  26 லட்சத்தையும், உயிரிழப்பு 70 ஆயிரத்தையும் தாண்டி செல்கிறது.  

தினசரி கொரோனா பாதிப்பில் இந்தியாவை முந்தியிருக்கும் இந்தோனேசியாவில் மோசமான சூழல் நிலவுகிறது.

மருத்துவமனைகள் நோயாளிகளாலும், மயானங்கள் சடலங்களாலும் நிரம்பி வழிகின்றன. மருத்துவமனைகளில் சேர்க்க முடியாத நோயாளிகளுக்கு வீட்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

அங்கும் போதிய சிகிச்சை கிடைக்காமல் உயிரிழப்பவர்களின் சடலங்களை தீயணைப்பு படையினர் மீட்டு வருகிறார்கள். ஆக்சிஜன் உள்பட சிகிச்சைக்கான மருத்துவ வசதி கிடைக்காது மக்கள் அல்லல் படுகிறார்கள்.

ஜாவா மற்றும் பாலி தீவுகளில் டெல்டா வைரஸ் வேகமாக பரவி வருவதே இந்த மோசமான சூழ்நிலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. 27 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தோனேசியாவில், ஒரு கோடியே 58 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

இதில் பெரும்பாலும் சீனாவின் சினோவாக் தடுப்பூசியே போடப்பட்டுள்ளது. ஆனால் இந்த தடுப்பூசி போட்டுக்கொண்ட மருத்துவ பணியாளர்கள் கொரோனாவுக்கு உயிரிழந்த சம்பவமும் அங்கு அரங்கேறியுள்ளது. 

இந்நிலையில் பைசர் தடுப்பூசியை செலுத்த அந்நாட்டு அரசு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இந்தோனேசியாவில் வைரஸ் பரவல் இதே நிலையில் நீடித்தால் இந்தியா 2 வது அலையில் சந்தித்த பேரழிவை இந்தோனேசியாவும் சந்திக்க நேரிடும் என சுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்