இங்கிலாந்து கார் பந்தய வீரரின் தயாரிப்பு - ஊனமுற்றோர் ஓட்டும் வகையில் கார்
பதிவு : ஜூலை 16, 2021, 12:30 PM
விபத்தில் இருந்து மீண்ட இங்கிலாந்து கார் பந்தய வீரர் சாம் ஷ்மிட், ஊனமுற்றவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் புதிய காரை தயாரித்துள்ளார்.
விபத்தில் இருந்து மீண்ட இங்கிலாந்து கார் பந்தய வீரர் சாம் ஷ்மிட், ஊனமுற்றவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் புதிய காரை தயாரித்துள்ளார்.

உலக இண்டிகார் சாம்பியன்ஷிப்  மீது மிகுந்த ஈர்ப்பு கொண்டவர் சாம் ஷ்மிட். ஐந்து வயதில் இருந்தே இவர் மனதில் வளர்ந்த இண்டிகார் கோப்பையை வெல்லும் லட்சியம், 1999ஆம் ஆண்டு லாஸ் வேகஸில் நிறைவேறியது. இருப்பினும், சில மாதங்களிலேயே, ஆர்லாண்டோவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இவர் விபத்தில் சிக்கினார். முதுகெலும்பு உடைந்ததால் பந்தயப்போட்டியில் கலந்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும் சாம் ஷ்மிட் தன்னம்பிக்கையால் "ஷ்மிட் பீட்டர்சன் மோட்டார் ஸ்போர்ஸ்" என்னும் நிறுவனத்தை தொடங்கினார். தற்போது, இந்த நிறுவனம், "ஆரோவ் மெக்லேரன்" என்ற பெயரில் 12 இண்டிகார் பந்தயத்தை வென்றுள்ளது. மேலும் "சாம் கார்" என்னும் பிரத்யேக வாகனத்தை பொறியாளர்களின் உதவியுடன் ஸ்மிட் உருவாக்கியுள்ளார். தன்னை போல் முடங்கி இருப்பவர்கள் பிறரின் உதவியின்றி ஓட்டுவதற்கு, பல சிறப்பு அம்சங்களைக் கொண்ட இந்த கார் உதவும் என்று ஷ்மிட் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

224 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

190 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

121 views

பிற செய்திகள்

மறைந்த ஹைத்தி அதிபரின் இறுதிச் சடங்கு - கலவரங்களுக்கு மத்தியில் நடந்த நிகழ்வு

ஹைத்தி அதிபர் ஜொவெனல் மொயிஸ், நாட்டு மக்களுக்காக உயிரிழந்ததாக அவரது மகன், தன் தந்தையின் இறுதிச் சடங்கில் வருத்ததோடு தெரிவித்தார்.

0 views

மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் சீன நகரம் - 1,000 ஆண்டுகளில் இல்லாத மழைப்பொழிவு

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் பெய்த வரலாறு காணாத மழைப்பொழிவு காரணமாக, பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதுபற்றிய செய்தித் தொகுப்பை பார்க்கலாம்.

4 views

ஒலிம்பிக்கில் முதல் பதக்கத்தை வென்றது சீனா

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் முதல் தங்கப் பதக்கத்தை சீனா தட்டிச் சென்று உள்ளது.

24 views

சுற்றுலா பயணிகளை வரவேற்கும் நாடுகள் - இந்தியர்களுக்கு விசா வழங்கும் நாடுகள்

கொரோனா பரவலின் இரண்டாவது அலை இந்தியாவில் குறைந்துள்ள நிலையில், இந்தியர்களை சுற்றுலா மற்றும் வர்த்தக பணிகளுக்கு வரவேற்கும் நாடுகள் பற்றிய விவரங்களை தற்போது பார்க்கலாம்...

19 views

திபெத் சென்ற சீன அதிபர் ஜி ஜின்பிங் - இந்திய எல்லை அருகேயுள்ள நகருக்கு பயணம்

சீன அதிபர் ஷி ஜின்பிங், முதன் முறையாக திபெத் பகுதிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்திய எல்லைக்கு அருகே உள்ள நகரின் வளர்ச்சி பணிகளை அவர் பார்வையிட்டார்.

19 views

பற்றி எரியும் காட்டுத் தீ - தீப்பொறிகளுக்கு நடுவில் வீரர்கள்

அமெரிக்காவின் தமாரக்கில் தீப்பிழம்புகளுக்கு மத்தியில் துணிச்சலாக வாகனத்தை ஓட்டிய தீயனைப்பு வீரர்கள், மக்களை காப்பாற்றினர்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.