படகில் பாடி அசத்திய ஆப்ரிக்கர் - கோரா ஹீரோ என்று பெயர் சூட்டிய மக்கள்

மேற்கு ஆப்ரிக்காவிலுள்ள காம்பிவை சேர்ந்த அலியு சாஹோ என்பவர் இத்தாலியின் படகில் பாரம்பரிய ஆப்பிரிக்க கோரா கருவிவை வாசித்து மக்களை மகிழ்வித்தார்.
படகில் பாடி அசத்திய ஆப்ரிக்கர் - கோரா ஹீரோ என்று பெயர் சூட்டிய மக்கள்
x
மேற்கு ஆப்ரிக்காவிலுள்ள காம்பிவை சேர்ந்த அலியு சாஹோ என்பவர் இத்தாலியின் படகில் பாரம்பரிய ஆப்பிரிக்க கோரா கருவிவை வாசித்து மக்களை மகிழ்வித்தார். வருடந்தோறும் நடந்து வரும் ப்ளூஸ் இசைத் திருவிழா, கொரோனா தொற்று காரணமாக இந்த வருடம் டிராசிமெனோ ஏரியில் சிறிய படகில் நடந்த்து. இதில் பங்கேற்ற சாஹோ,  கோரா கருவியை மக்களுக்கு அறிமுகப்படுத்தி குடியேறியவர்களின் அடையாளத்தையும் உலகிற்கு காட்ட முயற்சிப்பதாக கூறியுள்ளார். இவரின் திறனைக் கண்டு இத்தாலிய மக்கள் இவரிக்கு கோரா ஹீரோ என்று பெயர் சூட்டியுள்ளனர்.   

மெக்சிகோவில் பயன்பாட்டில் இல்லாத மழலையர் பள்ளி ஒன்றை, ஆதரவற்ற தெரு நாய்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் இடமாக அந்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் மாற்றியுள்ளனர். ஜும்பாங்கோ டே ஒகேம்போ பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த நாய்கள் பாதுகாப்பு மையத்திற்கு, "Doggies ஆஃப் சாண்டா லூசியா" என்று பெயரிடப்பட்டு, 50க்கும் மேற்பட்ட நாய்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட இதர வசதிகளை செய்து கொடுத்து, அதிகாரிகள் பராமரித்து வருகின்றனர். இந்த நாய்களை போதைப் பொருட்களைக் கண்டறியும் பணிகளிலும் ஈடுபடுத்த உள்ளதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனரோவின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டாலும், அவர் மருத்துவமனையில் இருந்து எப்போது வீடு திரும்புவார் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உடல் நல பாதிப்பால் பிரேசில் இராணுவ மருத்துவமனையில் அனுமதிகப்பட்டிருந்த அவர், குடல் அறுவை சிகிச்சை செய்ய வாய்ப்புள்ள காரணத்தால், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சா பவுலோவில் உள்ள விலா நொவா ஸ்டார் மருத்துவமனைக்கு விமானம் மூலம் நேற்று அழைத்து செல்லப்பட்டார். கடந்த ஆண்டு அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்ல் பொல்சனரோ உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

புகழ்பெற்ற கியூப அமெரிக்க ராப் பாடகர் பிட்புல், கியூப மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர், இது கியூபாவில் மட்டும் நடக்கும் போராட்டம் அல்ல... உலகம் முழுவதிற்குமானது என்றும்...இது அரசியலைப் பற்றி அல்ல... மக்களின் வாழ்கையைக் காபப்து பற்றி என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், பிரிவினை இல்லாது ஒன்று படவும் பிட்புல் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் கியூப மக்களுக்கு நேரடியாக உதவ முடியாமல் போனதில் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளதாகத் தெரிவித்த அவர், நட்பு நாடுகளை உதவ கேட்டுக் கொண்டதுடன், கியூப அமெரிக்கரான அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோசையும் இவ்விவகாரத்தில் தலையிட அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில் அதீத வெப்பத்தின் காரணமாக கொளுந்து விட்டு எரியும் காட்டுத் தீயை,  தீயணைப்புப்படை வீரர்கள் விமானங்கள் மூலம் கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர். டெஷூட்ஸ் மற்றும் ஜெஃபெர்சன் மாவட்டங்களில் பெரும்பான்மை, வனப்பகுதி காட்டுத் தீக்கு இரையாகி, வெளிப்படும் புகை விண்ணை முட்ட உயர்ந்துள்ளன. 11 அமெரிக்க மாநிலங்களில், சுமார் 1 மில்லியன் ஏக்கர் நிலப்பரப்பிலான வனப்பகுதிகள் எரிந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கால நிலை மாற்றத்தாலும், நீடித்திருக்கும் வறட்சியாலுமே அதிகமான காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்