அமெரிக்காவில் தொடரும் H1B விசா பிரச்சினை - கனடா நோக்கி படையெடுக்கும் இந்தியர்கள்
பதிவு : ஜூலை 16, 2021, 11:58 AM
அமெரிக்காவில் பணி புரிய தேவையான ஹெச்-1பி விசா பெறுவதில் சிக்கல்கள் தொடர்வதால், ஏராளமான இந்தியர்கள் கனடாவிற்கு செல்வதாக அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று கூறியுள்ளது. இது பற்றி அலசுகிறது, இந்த தொகுப்பு...
அமெரிக்காவில் பணி புரிய தேவையான ஹெச்-1பி விசா பெறுவதில் சிக்கல்கள் தொடர்வதால், ஏராளமான இந்தியர்கள் கனடாவிற்கு செல்வதாக அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.  இது பற்றி அலசுகிறது, இந்த தொகுப்பு... 

தவறான விசா கொள்கைகளின் காரணமாக, திறமை வாய்ந்த இந்தியர்கள், அமெரிக்காவிற்கு பதிலாக கனடாவிற்கு பெரிய அளவில் செல்லத் தொடங்கியுள்ளதாக 

அமெரிக்க நாடாளுமன்றத்தின் குடியேற்றம் மற்றும் குடியுரிமை தொடர்பான விசாரணை குழுவினரிடம், அமெரிக்க கொள்கைகான தேசிய ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது

மார்ச் 2021ல் அமெரிக்காவில் பணி புரிய அளிக்கப்படும் 85,000 ஹெச்.1பி விசாக்களுக்கு, 3.08 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டிய இந்த ஆய்வு நிறுவனம், இவற்றில் 72 சதவீத விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படுவதற்கு முன்பே நிராகரிக்கப்படுவதாக கூறியுள்ளது. 

அமெரிக்காவில் தற்போது மூன்று வகையான விசாக்களின் அடிப்படையில் 9.15 லட்சம் இந்தியர்கள் பணி புரிந்து வருகின்றனர். 2030இல் இவர்களின் எண்ணிக்கை 21.95 லட்சமாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

2016ஆம் ஆண்டை விட 2018ல் அமெரிக்க பல்கலைகழகங்களில் முதுகலை கம்யூட்டர் பொறியியல் பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 25 சதவீதம் குறைந்துள்ளதாக அமெரிக்க கொள்கைகான தேசிய ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அமெரிக்க பல்கலைகழங்களில் முதுகலை கம்யூட்டர் பொறியியல் பயிலும் மாணவர்களில் 75
சதவீதத்தினர் வெளிநாட்டு மாணவர்கள் ஆவர். 

இந்த வெளிநாட்டு மாணவர்களில் முன்றில் இரண்டு பங்கினர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2016ஆம் ஆண்டை விட 2018இல் கனடா பல்கலைகழகங்களில் பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 127 சதவீதம் அதிகரித்து 1.72 லட்சமாக அதிகரித்துள்ளது 

அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் எனவும் அமெரிக்க கொள்கைகான தேசிய ஆய்வு நிறுவனம் அரசை கேட்டுக்கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தண்டவாளத்தில் சிக்கிய இளைஞர் - துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய காவலர்

சேலம் ரயில் நிலையத்தில் இளைஞரின் உயிரை காப்பாற்றிய பெண் காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்...

108 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

54 views

பிற செய்திகள்

இந்தியாவில் பாதுகாப்பு அச்சம் உள்ளது - ஏஜென்சி நிறுவனம் கடத்தியதாக முகுல் சோக்‌ஸி புகார்

50 நாட்களுக்கு மேலாக கடத்தப்பட்டிருப்பதாக கூறி வந்த வைர வியபாரி முகுல் சோக்ஸி, இந்தியாவில் பாதுகாப்பு அச்சம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

6 views

மிகப் பிரம்மாண்டமான மீன் காட்சியகத்தை அகமதாபாத்தில் திறந்து வைக்கிறார் பிரதமர்

குஜராத் மாநிலத்தில், இந்தியாவின் மிகப்பெரிய மீன் காட்சியகத்தை காணொளி வாயிலாக பிரதமர் இன்று திறந்து வைக்கிறார்.

19 views

4 நாட்களாக நீடிக்கும் கனமழை - பலத்த காற்றால் கடல் கொந்தளிப்பு

கர்நாடகா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 4 தினங்களாக கனமழை நீட்டித்து வருகிறது.

8 views

தென்மேற்கு பருவமழை தீவிரம் - வெள்ளத்தில் மிதக்கும் மும்பை மாநகர்

தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக, மும்பை மாநகர் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

12 views

தமிழகம், புதுச்சேரியில் தொடர்ந்து இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது

புதுச்சேரியில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த, தமிழகத்தை சேர்ந்த ரவுடி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

28 views

செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி அலையை ஏற்று நடத்த 3 நிறுவனங்கள் விருப்பம்?

செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி ஆலையை ஏற்று நடத்த3 நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இது பற்றிய தொகுப்பை பார்க்கலாம்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.