24 வருடங்களுக்கு முன் காணாமல் போன மகன் - பாசக்கார தந்தையின் அசராத தேடல்
பதிவு : ஜூலை 15, 2021, 03:54 PM
பாசக்கார தந்தை ஒருவர் 24 வருட தொடர் தேடலுக்குப் பிறகு காணாமல் போன மகனுடன் ஒன்று சேர்ந்த நெகிழ்ச்சியான சம்பவம் சீனாவில் நிகழ்ந்துள்ளது. இது பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...
பாசக்கார தந்தை ஒருவர் 24 வருட தொடர் தேடலுக்குப் பிறகு காணாமல் போன மகனுடன் ஒன்று சேர்ந்த நெகிழ்ச்சியான சம்பவம் சீனாவில் நிகழ்ந்துள்ளது. இது பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

தரணியையே விலையாய்க் கொடுத்தாலும் தந்தை அன்புக்கு ஈடாகாது என்பதற்கு மற்றுமொரு சான்றாக விளங்குகிறார் சீனாவைச் சேர்ந்த குவா கேங்டன்...

இவரது 24 வருடத் தேடல் பயணத்தைக் கேட்டால், பூமியும் கூட பொறுமை இழந்து விடும்...

லியோசெங் பகுதியில் 1997ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த இரண்டே வயதான குவா சின்சென் திடீரென காணாமல் போகிறார்...

அவரைக் கடத்திச் சென்ற இளம்பெண்ணும் அவரது காதலரும் சின்சென்னை ஹெனான் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்திற்கு விற்றுள்ளனர்...

மகன் காணாமல் போனதால் பதறிப்போன சின்சென்னின் தந்தை குவா கேங்டன், கண்ணீர் மல்க காவல்துறையில் புகார் கொடுத்தார்...

விசாரணை தொடர்ந்தது...ஒரு மாதம்...2 மாதம்...ஒரு வருடம்...அவ்வளவுதான்...அப்பகுதி முழுமையும் சல்லடை போட்டுத் தேடியும் சின்சென் கிடைக்காததால் போலீசார் தேடுதல் பணியைக் கை விட்டனர்...

ஆனால் பெற்ற மனம் பிள்ளையை மறக்குமா...கண்ணில் நீரோடும் மனதில் உறுதியோடும்...காணாமல் போன தனது மகன் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் கண்டு பிடிப்பேன் என்று தீர்க்கமாக முடிவெடுத்தார் குவா கேங்க்டன்...

துணையாக ஒரு இருசக்கர வாகனம்...அதில் தனது மகனின் புகைப்படம் மற்றும் குறிப்புகள்... அவ்வளவுதான்... தனது நெடு வருடப் பயணத்தை சற்றும் தாமதிக்காமல் துவங்கினார் கேங்டன்...

வருடங்கள் உருண்டோடின...ஏகப்பட்ட கடன்...இடையில் பல விபத்துகள் நிகழ்ந்தன...10 இரு சக்கர வாகனங்கள் மாறின...கொஞ்ச நஞ்சமல்ல...5 லட்சம் கிலோ மீட்டர் பயணத்திற்குப் பிறகு, டி,என்.ஏ சோதனை மூலம், தனது நீர்த்துப் போகாத நம்பிக்கையால் 24 வருடங்களுக்குப் பிறகு இறுதியாக சின்சென்னைக் கண்டறிந்தார் கேங்டன்...

இந்த கணத்திற்காக எத்தனை வருடங்கள் தவமிருந்தார்...இதோ அந்த உணர்வுப்பூர்வமான நொடிகள்... தன் கைகளில் தவழ்ந்த ஆசை மகன் கண் காணா தூரத்தில், அப்பாவின் வாசமின்றி...தோளுக்கு மேல் வளர்ந்து நிற்க...கண்ணீர் வழிய கட்டித் தழுவிக் கொள்கிறார் கேங்டன்...

தளராத நம்பிக்கையோடு போராடிய இந்தத் தந்தையின் பாசம் உலகத்தினர் அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்துள்ளது.;..

தொடர்புடைய செய்திகள்

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் - தவறி விழுந்த பெண்ணை மீட்ட காவலர்

தெலங்கானாவில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.

55 views

தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள் - தடுப்பூசி மையத்தில் கைகலப்பு

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயம் அடைந்தனர்.

41 views

பிற செய்திகள்

பாகிஸ்தான் அரசுக்கு கடும் நெருக்கடி - பிரதமரின் வீடு வாடகைக்கு விடப்படுகிறது

கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துவரும் பாகிஸ்தான் அரசு, பிரதமரின் அதிகாரப்பூர்வ அலுவலகத்தை வாடகைக்கைக்கு விட முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

5 views

நியூயார்க் ஆளுநர் பதவி விலக வேண்டும் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தல்

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தின் ஆளுநர் பதவி விலக வேண்டும் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.

49 views

விண்வெளி மையத்தில் 3 விண்வெளி வீரர்கள் - விண்வெளியில் ரத்த மாதிரி பரிசோதனை

சீனாவின் சென்ஷோ-12 விண்கலத்தில் உள்ள மூன்று விண்வெளி வீரர்கள், தங்களது ரத்த மாதிரிகளை தாங்களே பரிசோதித்து வருகின்றனர்.

4 views

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் - மக்களவை 3-வது முறை ஒத்திவைப்பு

பெகாசஸ் உளவு விவகாரம் காரணமாக இன்று ஒரே நாளில் மக்களவை மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

9 views

ஈரான் அதிபராகும் இப்ராஹிம் ரைசி..அமெரிக்கா விதித்துள்ள தடைகளை நீக்க உறுதி - அணுசக்தி உடன்படிக்கை சாத்தியமா ?

ஈரான் அதிபராக பதவியேற்க உள்ள இப்ராஹிம் ரைசி, ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள சர்வாதிகாரத்தனமான பொருளாதார தடைகளை நீக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார். இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்...

9 views

சீனாவிற்கு எதிராக அணி திரளும் நாடுகள் - மலபார் பயிற்சியில் குவாட் போர் கப்பல்கள்

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியாவின் போர் கப்பல்கள் ஆகஸ்ட் இறுதியில், பசிபிக் பெரும்கடல் பகுதியில் கூட்டாக, போர் ஒத்திகையில் ஈடுபட உள்ளது பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.