பேருந்தை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் - 9 சீன பொறியாளர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 9 சீனர்கள் உள்ளிட்ட 13 பேர் கொல்லப்பட்டனர்.
பேருந்தை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் - 9 சீன பொறியாளர்கள் உயிரிழப்பு
x
பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 9 சீனர்கள் உள்ளிட்ட 13 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சீனா, காரணமானவர்களை கண்டறிய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. 

பாகிஸ்தானின் வட மேற்கு மாகாணம், கைபர் பக்தூன்க்வா...

இங்குள்ள ஒரு மலைப் பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்து மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதால், அந்த பேருந்து பள்ளத்தாக்கில் நொறுங்கி வீழுந்தது.

இதில் 9 சீனப் பொறியாளர்கள், இரண்டு பாகிஸ்தான் ராணுவ விரர்கள் மற்றும் இரண்டு உள்ளூர்வாசிகள் கொல்லப்பட்டனர்.  காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கைபர் பக்தூன்க்வா மாகாணத்தில் தாசு என்ற இடத்தில் சீனாவின் உதவியுடன் ஒரு நீர் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

சீனா பாகிஸ்தான் பொருளாதார தாழ்வாரத் திட்டத்தின் கீழ் இந்த அணைக்கட்டு மற்றும் நீர் மின் உற்பத்தி நிலையம் உருவாக்கப்படுகிறது.

இதன் கட்டுமானப் பணிகளில் ஈடுப்பட்டிருந்த சீனப் பொறியாளர்கள் 30 பேர் சென்ற பேருந்து மீது வெடிகொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில், 9 சீனர்கள் கொல்லப்பட்டனர். 

இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சீன அரசு,  இதைப் பற்றி தீவிரமான விசாரணை மேற்குள்ளும்படி பாகிஸ்தான் அரசை கேட்டுக் கொண்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தானில் சீனப் பொறியாளர்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்