ஆஃப்கனில் அதிகரிக்கும் தாலிபான் ஆதிக்கம் - இந்தியாவின் உதவியை கோரும் ஆஃப்கன்

தாலிபான்களை எதிர்த்துப் போராட, இந்தியாவிடம் இருந்து ராணுவம் உதவி கோர உள்ளதாக ஆப்கானிஸ்தான் கூறியுள்ளது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
ஆஃப்கனில் அதிகரிக்கும் தாலிபான் ஆதிக்கம் - இந்தியாவின் உதவியை கோரும் ஆஃப்கன்
x
அமெரிக்காவின் இரட்டை கோபுரத் தாக்குதல்களுக்கு காரணமான பின் லேடன் தலைமையிலான அல் கொய்தாவையும், அவர்களுக்கு ஆதரவு அளித்து வந்த தாலிபான்களையும் அழிக்க, 2001இல் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படை எடுத்தது. 20 ஆண்டுகளாக தொடரும் உள்நாட்டுப் போருக்கு பிறகு, ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் வெளியேறி வருகின்றன.

ஆகஸ்ட் 31க்குள் அமெரிக்க படைகள் முற்றிலும் வெளியேற உள்ள நிலையில், ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளை தாலிபான் படைகள் கைபற்றி, முன்னேறி வருகின்றனர். அமெரிக்க படைகள் முற்றிலும் வெளியேறிய பின், தாலிபான்களின் தாக்குதல்களை சமாளிக்க, இந்தியாவிடம் ராணுவ உதவி கோர உள்ளதாக, இந்தியாவிற்கான ஆப்கானிஸ்தான் தூதுவர் பரித் மமுன்ட்ஸே (Farid Mamundzay) கூறியுள்ளார். இந்திய ராணுவ வீரர்களை ஆப்கானிஸ்தானிற்கு அனுப்ப தேவையிருக்காது என்றும், ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்கு தேவையான தொழில்நுட்ப உதவுகள், தளவாடங்கள் மற்றும் சிறப்புப் பயிற்சிகளை அளிக்க இந்தியாவின் உதவி தேவைப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். தெற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தஹர் நகரை தாலிபான் படைகள் நெருங்கி வருவதால், அங்கு இருந்த 50 இந்திய தூதுரக மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள், மற்றும் ஊழியர்கள் இந்தியாவிற்கு ஒரு சிறப்பு விமானம் மூலம்  சமீபத்தில் நாடு திரும்பினர்.

தாலிபான்களுடன் நடத்தப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் பலன் அளிக்காத நிலையில், அடுத்த சில மாதங்களில், ஆப்கானிஸ்தான் தலை நகர் காபூல் உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் தாலிபான்களை கைபற்ற வாய்ப்புள்ளதாக ராணுவ நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த நிலையில், கந்தகார் பகுதியில் ஆப்கன் ராணுவ டாங்கிகளை, தாலிபான் படைகள் விரட்டிய தாக்கிய அதிர்ச்சிகரமான காட்சிகள் வெளியாகியுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்