நேபாளத்தில் என்ன நடக்கிறது?

நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை ரத்து செய்துள்ள நேபாள உச்ச நீதிமன்றம், எதிர்கட்சித் தலைவரான ஷெர் பகதூர் தெபாவை பிரதமராக நியமிக்கும்படி நேபாள குடியரசுத் தலைவருக்கு உத்தரவிட்டுள்ளது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
நேபாளத்தில் என்ன நடக்கிறது?
x
நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் எழுந்த உட்கட்சி மோதல்களினால், பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசுக்கு இரண்டாவது முறையாக நெருக்கடி ஏற்பட்டது. மாதவ் குமார் நேபாள் தலைமையிலான அணி தனது ஆதரவை வாபஸ் பெற்றது. 2021 மே 10ஆம் தேதி நேபாள நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்த பின், கே.பி.சர்மா ஒலி இடைக்கால பிரதமராக, குடியரசுத் தலைவர் பித்யா தேவி பன்டாரியால் நியமிக்கப்பட்டார். மே 22ல் நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, நவம்பரில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என அறிவிப்பை வெளியிட்டார், குடியரசு தலைவர்.

எதிர்கட்சியான நேபாள காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை பலம் இருப்பதாகவும், அதை நிருபிக்க வாய்ப்பு அளிக்காமல் நாடாளுமன்றத்தை கலைத்தது தவறு என்றும் நேபாள உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நேபாள உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது தவறு என்று கூறி அதை ரத்து செய்து, நேபாள காங்கிரஸ் தலைவர் ஷெர் பகதூர் தெபாவை பிரதமராக நியமிக்கும்படி குடியரசுத் தலைவருக்கு உத்தரவிட்டது. ஜூலை 18க்குள் ஷெர் பகதூர் தெபா பெரும்பான்மையை நிருப்பிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஷெர் பகதூர் தேபா நேபாளத்தில் பிரதமராக பதவியேற்க உள்ளார். ஆனால் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்துள்ள, மாதவ் குமார் நேபாள் தலைமையிலான அணி, ஷெர் பகதூர் தேபாவிற்கு அளித்த வந்த ஆதரவை சமீபத்தில் வாபஸ் பெற்றுள்ளதால்,  ஷெர் பகதூர் தேபாவினால் பெரும்பான்மையை நிரூபிப்பது கடினம் என்று கருதப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்