அதானி குழுமம் மதிப்பு - ரூ.7.45 லட்சம் கோடி

அதானி குழுமத்தில் உள்ள நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு 100 பில்லியன் டாலர்கள் மதிப்பை கடந்துள்ளதாக கெளதம் அதானி கூறியுள்ளார்.
அதானி குழுமம் மதிப்பு - ரூ.7.45 லட்சம் கோடி
x
அதானி குழுமத்தில் உள்ள நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு  100 பில்லியன் டாலர்கள் மதிப்பை கடந்துள்ளதாக கெளதம் அதானி கூறியுள்ளார். இந்திய ரூபாயில் இது 7.45 லட்சம் கோடி ரூபாயாகும். இதைப் பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.திங்களன்று நடைபெற்ற அதானி குழுமத்தின் பங்குதாரர்களின் ஆண்டுக் கூட்டத்தில், காணொளி மூலம் குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி உரையாற்றினார். அதானி குழுமத்தை சேர்ந்த நிறுவனங்களின் சந்தை மதிப்பு 7.45 லட்சம் கோடி ரூபாயை கடந்துள்ளதாக குறிப்பிட்ட கெளதம் அதானி, முதல் தலைமுறை இந்திய நிறுவனம் ஒன்று இத்தகைய மைல்கல்லை எட்டுவது இது தான் முதல் முறை என்று கூறியுள்ளார். 2020-21இல் அதானி குழும நிறுவனங்களில் மொத்த லாபம், வட்டி, வரிகள், தேய்மானச் செலவுகளுக்கு முன்பு 32,000 கோடி ரூபாயாக, கடந்த ஆண்டை விட 22 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறினார். அதானி குழுமங்களின் நிகர லாபம் 166 சதவீதம் அதிகரித்து 9,500 கோடியாக அதிகரித்துள்ளதாக கெளதம் அதானி தெரிவித்தார். இந்திய விமான நிலையத் துறையில் அதானி குழுமத்தின் பங்கு 25 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும், வேறு எந்த விமான நிலைய நிறுவனமும் இந்த மைல்கல்லை எட்டியதில்லை என்றும் கூறினார். 
.

Next Story

மேலும் செய்திகள்