தென் ஆப்பிரிக்காவில் தொடர் கலவரங்கள் - கலவரத்தில் 6 பேர் உயிரிழப்பு
பதிவு : ஜூலை 13, 2021, 12:15 PM
தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள், கடைகளை சூறையாடி உள்ளனர்.
தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள், கடைகளை சூறையாடி உள்ளனர்.நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் ஜேக்கப் சுமா கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்து, அவரது ஆதரவாளர்களும் மக்களும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் ஜோகன்னஸ்பெர்க்கில் நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. அப்போது, கலவரத்தில் ஈடுபட்டவர்கள், கடைகளை சூறையாடி அங்கிருந்து பொருட்களை திருடிச் சென்றனர். தொடர்ந்து ரப்பர் குண்டுகளால் சுட்டு, கலவரக்காரர்களை போலீசார் விரட்டியடித்தனர்.இதனிடையே, கலவரத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோரை கைது செய்து உள்ளதாகவும், வன்முறை சம்பவங்களில் 6 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் தென் ஆப்பிரிக்க போலீசார் தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் கலவர சம்பவங்கள், மருந்து மற்றும் உணவுப் பற்றாக்குறையை அதிகரிக்கவே வழிவகுக்கும் என்று அந்நாட்டு அதிபர் சிரில் ரம்போசா கூறி உள்ளார். வன்முறை நிகழ்வுகளால் தடுப்பூசி செலுத்தும் பணி பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் கவலை தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

674 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

460 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

62 views

பிற செய்திகள்

23வது பிறந்தநாளை கொண்டாடும் கூகுள் - உலகின் நம்பர் ஒன் தேடுதல் எந்திரம்

உலகின் மிகப் பெரிய தேடுதல் எந்திரமான கூகுள் நிறுவனம், தனது 23ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறது.

9 views

நீண்ட நாட்களுக்கு பிறகு இசை நிகழ்ச்சி - "ரோலிங் ஸ்டோன்ஸ்" இசைக்குழு நடத்தியது

அமெரிக்காவின் மிக பிரபலமான ரோலிங் ஸ்டோன்ஸ் இசைக்குழு நீண்ட நாட்களுக்கு பிறகு மேடை கச்சேரியை துவக்கியுள்ளனர்.

14 views

அச்சுறுத்தும் கால நிலை மாற்றம் - உக்ரைனில் நூற்றுக்கணக்கானோர் போராட்டம்

கால நிலை மாற்றத்தை எதிர்கொள்ள அரசு கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தி உக்ரைனில் போராட்டம் நடைபெற்றது.

11 views

ஆப்கானிஸ்தானில் மீட்புப் பணிகள் - இராணுவ வீரர்களை கௌரவப்படுத்திய மெர்கெல்

ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்ட ஜெர்மன் இராணுவ வீரர்களை அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல் கவுரவப் படுத்தினார்.

9 views

அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா பரவல் - 4 கோடியே 29 லட்சத்தைக் கடந்த மொத்த பாதிப்பு

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 29 லட்சத்தைத் தாண்டியது.

10 views

சீனாவில் புயல்...கனமழை...வெள்ளப்பெருக்கு - ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

மத்திய சீனாவில் புயல் மற்றும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.