இனி விண்வெளிக்கு சுற்றுலா... சாத்தியமான அசாத்திய பயணம் - கொண்டாட்டம்
பதிவு : ஜூலை 12, 2021, 04:46 PM
விண்வெளி சுற்றுலாவை சாத்தியமாக்கியிருக்கும் அசாத்திய ராக்கெட் விமானம்... நீண்ட கால போராட்டத்தின் இறுதியில் சிறு வயது கனவை நனவாக்கிய 71 வயது தொழில் அதிபரின் உணர்ச்சிமிகுந்த தருணத்தை விளக்கும் ஒரு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்...
வாழ்க்கையில் கவலைகளுக்கு இடமளிக்காது கனவுகள் ஆயிரம் காணும் பருவம் பதின்மம். அப்போது கண்ட கனவை அடைய பலரும் மெனக்கெடுவார். அதில் சிறு சறுக்கலை கண்டு பின்வாங்குவோர் தோல்வியை தழுவினாலும், விடாப்பிடியாக இருப்பவர்கள் வெற்றியை முத்தமிடுவர். அப்படி வெற்றியை முத்தமிட்டவர்தான்  ரிச்சர்ட் பிரான்சன்.

விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் தனது சிறு வயது கனவை நனவாக்க 2004-ஆம் ஆண்டில் விர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தை தொடங்கினார். இதற்காக நிறுவனம் விஎஸ்எஸ் யூனிட்டி ராக்கெட் விமானம் ஒன்றை உருவாக்கியது. 2007 -ல் விமானத்தின் கமர்சியல் சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கட்டமைப்பு, தொழில்நுட்ப கோளாறுகள் முட்டுக்கட்டையிட்டது. இதில் 2014ஆம் ஆண்டில் நடந்த சோதனையின் போது, விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி ஒருவர் உயிரிழந்தார். இது பெறும் சரிவாக அமைந்தாலும் விமானம் நவீனப்படுத்தலும், சோதனையும் தொடர்ந்தது. 2018, 2019 மற்றும் கடந்த மே மாதம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் விமானம் விண்வெளியை எட்டியது.

இதனையடுத்து சுற்றுலாப் பயணிகளை விண்வெளிக்கு அனுப்பும் முக்கிய பரிசோதனையை ஜூலை 11 ஆம் தேதி மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. 2 விமானிகள் இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட விண்வெளி விமானத்தில், பணிகளாக ரிச்சர்ட் பிரான்சன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான சிரிஷா உள்பட 4 பேர் அமர்ந்திருந்தனர்.

இரட்டை விமானங்களுக்கு நடுவே பொருத்தப்பட்டிருந்த ராக்கெட் விமானம் அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் உள்ள பாலைவனப் பகுதியில் மாலை 3.30 மணியளவில் பயணத்தை தொடங்கியது. இரட்டை விமானம் செங்குத்தாக பறந்து 13 கிலோ மீட்டர் தொலைவு சென்றதும், மத்தியில் பொருத்தப்பட்டிருந்த விண்வெளி ராக்கெட் விமானம் கழற்றப்பட்டது. இதனையடுத்து நெருப்பை கக்கிக்கொண்டு ராக்கெட் உந்து விசையில் சென்ற விமானம் 84 கிலோ மீட்டருக்கு மேல் சென்றது. ரிச்சர்ட் பிரான்சன், சிரிஷா உள்ளிட்டோர் விண்வெளியில் மிதந்தனர். அப்போது தன்னுடைய சிறு வயது கனவு நிறைவேறியதாக ரிச்சர்ட் பிரான்சன் பூரிப்புடன் பேசும் வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார், ரிச்சர்ட் பிரான்சன். பின்னர் தரைக் கட்டுப்பாட்டு கமாண்ட் மூலம் விமானம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்திலிருந்து தரையிறங்கிய 71 வயது ரிச்சர்ட் பிரான்சன், ஒரு 7 வயது குழந்தையை போன்று ஓடிவர, அவரது குடும்பத்தார் வரவேற்றனர். விண்வெளி பயண வெற்றியை கொண்டாடியவர்கள், விஞ்ஞானிகளுக்கு நன்றியை தெரிவித்தனர்.

விர்ஜின் கேலக்டிக் நிறுவனம் அடுத்த ஆண்டு முதல் வணிகரீதியிலான சேவையை தொடங்க இருப்பதாக தெரிவித்து உள்ளது. இதுவரையில் 60 நாடுகளை சேர்ந்த 600-க்கும் மேற்பட்டோர் சுற்றுலாவுக்கு முன்பதிவு செய்துள்ளனர். சுமார் ஒரு மணிநேர உள்ளான  பயணத்திற்கு ஒரு கோடியே 90 லட்சம் ரூபாயாக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. விண்வெளி சுற்றுலா திட்டத்தில் அமேசான், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்கள் உடனான போட்டியில், விடா முயற்சியால் வெற்றியை தனதாக்கி சாதித்து காட்டியிருக்கிறார்  ரிச்சர்ட் பிரான்சன்.

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

246 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

199 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

132 views

பிற செய்திகள்

செல்ல பிராணிகளை அனுமதிக்கும் மதுபான விடுதி - நாய்களுக்கான பிரத்யேக பானங்கள்

லண்டனில் ஒரு மதுபான விடுதியில், நாய்களுக்காக, காய் கறிகள், பழங்களில் செய்யப்பட்ட தனித்துவம் மிக்க பானங்கள் வழங்கப்படுகின்றன. அது பற்றிய ஒரு சுவாரஸ்ய தொகுப்பை தற்போது பார்க்கலாம்...

22 views

கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு - ஊருக்குள் புகுந்த வெள்ளம்

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

9 views

வெள்ளப்பெருக்கில் சிக்கிய மருத்துவமனை - பச்சிளங்குழந்தை ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

சீனாவின் ஜெங்ஜவ் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிக் கொண்ட மருத்துவமனை ஒன்றின், "குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில்" இருந்து பச்சிளங்குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.

10 views

மறைந்த ஹைத்தி அதிபரின் இறுதிச் சடங்கு - கலவரங்களுக்கு மத்தியில் நடந்த நிகழ்வு

ஹைத்தி அதிபர் ஜொவெனல் மொயிஸ், நாட்டு மக்களுக்காக உயிரிழந்ததாக அவரது மகன், தன் தந்தையின் இறுதிச் சடங்கில் வருத்ததோடு தெரிவித்தார்.

8 views

மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் சீன நகரம் - 1,000 ஆண்டுகளில் இல்லாத மழைப்பொழிவு

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் பெய்த வரலாறு காணாத மழைப்பொழிவு காரணமாக, பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதுபற்றிய செய்தித் தொகுப்பை பார்க்கலாம்.

14 views

ஒலிம்பிக்கில் முதல் பதக்கத்தை வென்றது சீனா

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் முதல் தங்கப் பதக்கத்தை சீனா தட்டிச் சென்று உள்ளது.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.