புதினுடன் தொலைபேசியில் பேசிய ஜோ பைடன் - சைபர் தாக்குதல்களை தடுக்க வலியுறுத்தினார்

அமெரிக்க நிறுவனங்கள் மீது ரஷ்யாவில் இருந்து நடத்தப்படும் சைபர் தாக்குதல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஜோ பைடன், ரஷ்ய அதிபர் புதினிடம் வலியுறுத்தியுள்ளார்.
புதினுடன் தொலைபேசியில் பேசிய ஜோ பைடன் - சைபர் தாக்குதல்களை தடுக்க வலியுறுத்தினார்
x


"தடுக்காவிட்டால் பதிலடி" - அமெரிக்கா

அமெரிக்க நிறுவனங்கள் மீது ரஷ்யாவில் இருந்து நடத்தப்படும் சைபர் தாக்குதல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஜோ பைடன், ரஷ்ய அதிபர் புதினிடம் வலியுறுத்தியுள்ளார். 
கடந்த சில மாதங்களாக பல்வேறு அமெரிக்க பெரு நிறுவனங்களின் கணினிகளில் இணையம் மூலம் சைபர் தாக்குதல் நடத்தி, செயலிழக்கச் செய்யும் கும்பல்கள் ரஷ்யாவில் இருந்து செயல்படுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியிருந்தது.

கடந்த மே மாதத்தில் அமெரிக்காவின் கிழக்கு மாகாணங்களில் பெட்ரோல் விநியோகத்தை மேற்கொண்டுள்ள நிறுவனத்தின் கணினிகள் சைபர் தாக்குதலினால் செயலிழக்கப்பட்டு, அந்தப் பகுதியில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டது. 

BREATH.. ஜோ பைடன், விளாடிமிர் புட்டின், சைபர் தாக்குதல்கள், முடங்கிய அமெரிக்க  நிறுவனங்கள்

ஜூன் 16இல் ஜெனிவாவில் ரஷ்ய அதிபரை சந்தித்து உரையாடிய ஜோ பைடன், இந்த பிரச்சனை பற்றி விவாதித்தார்.  சைபர் தாக்குதல்களை தடுத்து நிறுத்தும் படி வலியுறுத்தினார். 

ஆனால் ஹேக்கர் கும்பல்கள் மீது ரஷ்ய அரசு இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

இந்நிலையில், ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில் உரையாடிய ஜோ பைடன், அமெரிக்கா மற்றும் இதர நாடுகளைச் சேர்ந்த பெரும் நிறுவனங்கள் மீது தொடர்ந்து சைபர் தாக்குதல் நடத்தும் ரஷ்யாவைச் சேர்ந்த கும்பல்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

ரஷ்யா உரிய நடவடிக்கைகளை எடுக்க தவறினால், அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என்று ஜோ பைடன் அப்போது உறுதிபட தெரிவித்துள்ளார்.
 


Next Story

மேலும் செய்திகள்